விதியை மீறி பட்டாசு வெடித்ததாக 347 நபர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு...!
தீபாவளியன்று நேரக் கட்டுப்பாடுகளை மீறி பட்டாசுகளை வெடித்ததாக சென்னை காவல்துறை 347 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, அனுமதிக்கப்பட்ட நேர இடைவெளியில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என, மாநகர போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். இந்த நிலையில் நேரக் கட்டுப்பாடுகளை மீறி பட்டாசுகளை வெடித்ததாக சென்னை காவல்துறை 347 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளது.
தீபாவளியன்று உரிமம் பெறாத பட்டாசு விற்பனை, அதிக சத்தம் எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடித்தல், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை மீறியதாக 347 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை காவல்துறை (ஜிசிபி) தெரிவித்துள்ளது. நேர வரம்பு மீறல்களுக்காக வெள்ளிக்கிழமையும் சுமார் 80 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில், 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2022 இல் 271 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். இதற்கிடையில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகளை வெடித்ததாக 65 பேர் மீது ஆவடி நகர போலீசார் 48 வழக்குகளை பதிவு செய்தனர்.