'பாய்ந்தது வழக்கு' .. நடிகர் விஜய் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.! காவல்துறை நடவடிக்கை.!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தனது அரசியல் கட்சி பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டார். மேலும் இவரது அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயரிடப்பட்டது. மேலும் கட்சியின் பெயர் தொடர்பான சர்ச்சைக்கும் சில தினங்களுக்கு முன்பு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தளபதி விஜய் ருசிய ஆனந்த் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கட்சிக் கொடியேற்றும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்சி உறுப்பினர்கள் கூடிய நிலையில் முறையான அனுமதி இல்லாமல் விழாவிற்கு ஏற்பாடு செய்ததாக கூறி விஜயின் கட்சி உறுப்பினர்கள் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொடி கம்பத்தையும் காவல்துறை எடுத்துச் சென்றுள்ளது. விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு அவரது கட்சி உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
English Summary: Police Registered case against actor Vijay's Political party members for not getting prior permission to host a function
.