பரந்தூர் செல்லும் விஜய்க்கு அதிரடி கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை..!! மீறினால் கைது செய்ய திட்டமா..?
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 900 நாட்களை கடந்தும் மக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போராட்டக்குழுவை சந்திக்க விஜய் திட்டமிட்டிருந்ததாக செய்திகள் வெளியான நிலையில், அனுமதி கேட்டு காஞ்சிபுரம் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஜனவரி 20ஆம் தேதி விஜய், மக்களை சந்திக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும், சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
விஜய்க்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்
* காவல்துறை அனுமதியளித்த இடத்தில் மட்டும் தான் மக்களை சந்திக்க வேண்டும். மற்ற இடங்களில் சந்திக்க கூடாது.
* அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான நபர்களே வர வேண்டும். தேவையின்றி, அதிக கூட்டத்தை கூட்டக் கூடாது.
* காவல்துறை அனுமதிக்கப்பட்ட வாகனத்தில் தான் வர வேண்டும்.
* குறிப்பிட்ட நேரத்தில் பரந்தூர் மக்களை விஜய் சந்தித்து முடிக்க வேண்டும். அதற்கு மேல் அனுமதி கிடையாது.
* எந்த இடத்தில் விஜய் மக்களை சந்திக்க உள்ளார் என்பது குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்பட உள்ளது
விஜய் கட்சி தொடங்கியப் பின், மக்களை நேரடியாக அதிக முறை சந்திக்கவில்லை என்றாலும், கட்சி தொடங்குவதற்கு முன்பு சந்தித்துள்ளார். 2017இல் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்களுடன் விஜய் நேரடியாக கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார். 2017இல் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் வீட்டிற்கு நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று விஜய் தனது ஆதரவை தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்டார். தற்போது பரந்தூர் விமான நிலைய போராட்டக்காரர்களை விஜய் சந்திக்க உள்ளார்.