முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மின்சாரம் தாக்கி உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர்... ரூ.25 லட்சம் நிதியுதவி...! முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Police assistant inspector who died due to electrocution... Rs 25 lakh financial assistance
08:18 AM Nov 01, 2024 IST | Vignesh
Advertisement

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில்; இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த சரவணன் (வயது 36) என்பவர் இன்று 31.10.2024 அதிகாலை சுமார் 1.00 மணியளவில் பரமக்குடி நகரில் இரவு நேர ரோந்துப் பணியின் போது கீழே விழுந்த இருப்புக் கம்பத்தை அகற்றும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

உதவி ஆய்வாளர் சரவணன் அவர்களின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். உதவி ஆய்வாளர் சரவணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
mk stalinsub inspectortn governmentதமிழ்நாடு அரசு
Advertisement
Next Article