முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

PMO MODI | "அம்பானி, அதானி பற்றி வாயே திறக்கல; ராகுலுக்கும் கருப்பு பணம் கிடைக்குதா.?.." பிரதமர் மோடி கேள்வி.!!

04:06 PM May 08, 2024 IST | Mohisha
Advertisement

PMO Modi: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் வருகின்ற மே 13ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திரா தெலுங்கானா உட்பட 10 மாநிலங்களில் உள்ள 96 பாராளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைமுறை இருக்கிறது.

Advertisement

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே மீதி இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய தலைவர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி தெலுங்கானாவில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்கள் பாஜகவிற்கு நிதி வழங்கி வருவதாக ராகுல் காந்தி முன்வைத்து வரும் குற்றச்சாட்டிற்கு பிரதமர் மோடி(PMO Modi) பதிலடி கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக தெலுங்கானா தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி காங்கிரஸ் கட்சியின் இளவரசர் ராகுல் காந்தி திடீரென அம்பானி மற்றும் அதானி பற்றி பேசுவதை ஏன் நிறுத்தினார்?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் இது தொடர்பாக தொடர்ந்து பேசிய மோடி கடந்த ஐந்து வருடங்களாக இரவு பகல் பாராமல் அம்பானி மற்றும் அதானே குறித்து பேசி வந்த காங்கிரஸ் கட்சியின் இளவரசர் தேர்தல் ஆரம்பித்த பிறகு அவர்களைப் பற்றி ஏன் பேசவில்லை.? என காங்கிரஸ் இளவரசரிடம் கேள்வி கேட்க விரும்புவதாக மோடி தெரிவித்துள்ளார். மேலும் அதானி மற்றும் அம்பானி இடமிருந்து காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு எவ்வளவு கருப்பு பணம்.? பெற்றுள்ளது எனவும் கேள்வி எழுப்பினார்.

Read More: போலி ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு செக்.. அரசு அதிரடி நடவடிக்கை!

Advertisement
Next Article