பிஎம் வித்யாலட்சுமி திட்டம்..!! மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி..!! ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு..!!
தேசிய கல்விக் கொள்கையின் ஒருபகுதியான ”பிஎம் வித்யாலட்சுமி” திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்று உயர்கல்வி படிக்கலாம். அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடனுதவிகள் வழங்கப்படும். ரூ.7.50 லட்சம் வரை மத்திய அரசு உத்தரவாதம் இருக்கும். ரூ.10 லட்சம் ரூபாய் வரை கடனுதவி பெறும் மாணவ, மாணவிகளுக்கு 3 விழுக்காடு வட்டிச் சலுகையும் கொடுக்கப்படும்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, நேற்று (நவம்பர் 6) கூடியது. இதில், பிஎம் வித்யாலக்ஷ்மி க்கு ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் ஒருபகுதி. அதன்படி, இத்திட்டத்தில் திறமையான மாணவர்கள் இந்தியாவில் உள்ள பொது அல்லது தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் உயர் படிப்பைத் தொடர கடனுதவி பெற்றுக் கொள்ளலாம்.
வித்யாலக்ஷ்மி திட்டத்தின் அம்சங்கள்
* தகுதியான பொது அல்லது தனியார் துறை உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்படும் மாணவர்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து பிணையில்லாத, உத்தரவாதமில்லாத கடன்களுக்குத் தகுதி பெறுவார்கள்.
* இத்திட்டத்தின் கீழ், ரூ.7.5 லட்சம் வரையிலான கடன்கள், நிலுவையிலுள்ள கடனைத் திருப்பிச் செலுத்தாத தொகையில் 75%-க்கான கிரெடிட் உத்தரவாதத்திற்குத் தகுதிபெறும்.
* அதாவது, கடன் வாங்கிய மாணவர் தவறினால், நிலுவையில் உள்ள கடன் தொகையில் 75 சதவீதம் வங்கிக்கு அரசாங்கம் திருப்பிச் செலுத்தும்.
வித்யாலக்ஷ்மி திட்டத்தின் கீழ் வட்டி மானியம்
* ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கு 3 சதவீத வட்டி மானியம் (மானியம்) அரசாங்கத்தால் ஏற்கப்படும்.
* ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்களுக்கு வட்டி மானியம் வழங்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
* குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 8 லட்சத்திற்கும் குறைவாக உள்ள மாணவர்கள் மற்றும் பிற அரசு உதவித்தொகைகள் அல்லது வட்டி மானியத் திட்டங்களின் பயனாளிகள் இல்லாமல் இருந்தால் இதற்கு தகுதியுடையவர்கள்.
* 2024-25 முதல் 2030-31 வரையிலான வட்டி மானியத்திற்கான ரூ.36,00 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
* அரசு கல்வி நிறுவனங்களில் சேர்ந்து தொழில்/தொழில்நுட்பப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு முன்னுரிமை.
Read More : நீங்கள் கடன் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டுமா..? அமாவாசை அன்று இந்த பரிகாரத்தை மட்டும் பண்ணுங்க..!!