அதிமுகவில் திடீர் பரபரப்பு...! பிரதமர் மோடியை சந்திக்கும் ஓ.பன்னீர்செல்வம்...! அடுத்து என்ன...?
தமிழகம் வரும் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க உள்ளார்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது அணிக்கு நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக திருச்சி வருகிறார். அ.தி.மு.க.வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் திருச்சி விமான நிலையத்தில் மோடியை சந்திக்க பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கியுள்ளது.
திருச்சியில் பல்வேறு திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை துவக்கி வைக்கும் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். விமான நிலையத்தில் பிரதமரை ஓ.பி.எஸ் வரவேற்கிறார். நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு பிரதமர் விமான நிலையத்தில் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
தமிழகத்தில், பாஜகவுடன் ஏற்பட்ட உரசல் காரணமாக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பிறகு, முதல்முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அரசு நிகழ்ச்சிகளை முடித்த பிறகு, தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் பிரதமர் மோடி. அப்போது ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாஜகவுடனான உறவை துண்டிக்கும் முடிவில் அக்கட்சி உறுதியாக இருப்பதாக எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் வலியுறுத்திய அதிமுக பொதுக்குழு கூட்டத்தைத் தொடர்ந்து இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றது. இது பழனிசாமிக்கு நெருக்கமான எதிர்க்கட்சி மற்றும் அதன் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.