For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'நீங்கள் இந்தியாவின் பெருமை' வலுவாக திரும்பி வாருங்கள்..!!  வினேஷ் போகத்-க்கு ஆறுதல் சொன்ன பிரதமர் மோடி..!!

'Come Back Stronger, Rooting For You': PM Modi To Vinesh Phogat After Paris Olympics Disqualification
01:44 PM Aug 07, 2024 IST | Mari Thangam
 நீங்கள் இந்தியாவின் பெருமை  வலுவாக திரும்பி வாருங்கள்      வினேஷ் போகத் க்கு ஆறுதல் சொன்ன பிரதமர் மோடி
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வலிமையுடன் திரும்பி வர வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement

ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றை வினேஷ் போகத். இந்நிலையில், கூடுதல் எடையால் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அவரால் விளையாட முடியாது எனவும் அவருக்கு எவ்வித பதக்கமும் கிடையாது என்று ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. 50 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தப் பிரிவில் போட்டியிடும் வினேஷ், தனது போட்டிக்கான வரம்பிற்கு மேல் எடைபோட்டதால், போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்திற்கு, பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “வினேஷ், நீங்கள் சாம்பியன்களில் ஒரு சாம்பியன்! நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம். இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் விரக்தியின் உணர்வை வார்த்தைகள் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அதே சமயம், நீங்கள் நெகிழ்ச்சித்தன்மையை வெளிப்படுத்துகிறீர்கள் என்பதை நான் அறிவேன். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு. வலுவாக திரும்பி வா! நாங்கள் அனைவரும் உங்களுக்காக ஆதராவாக இருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

பதக்கம் வெல்லும் இந்தியர்களை பிரதமர் மோடி தொலைபேசி மூலம், தொடர்புகொண்டு வாழ்த்து கூறுவவது வழக்கம். ஆனால், நேற்று வினேஷ் போகத் குறைந்த பட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்த பிறகும் வாழ்த்து கூறாமல் இருந்தார். இந்நிலையில், வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, முதல் நபராக பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more ; Paris Olympics 2024 | மல்யுத்த இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத் தகுதி நீக்கம்..!!

Tags :
Advertisement