For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"குடிக்க தேங்காய் தண்ணி.." "படுக்க மரக்கட்டில்" ஸ்ரீராமருக்காக பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பு.!

08:18 PM Jan 18, 2024 IST | 1newsnationuser7
 குடிக்க தேங்காய் தண்ணி     படுக்க மரக்கட்டில்  ஸ்ரீராமருக்காக பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பு
Advertisement

ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி நகரில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்விற்காக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பல்வேறு சடங்குகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்கு இந்தியா மற்றும் உலக அளவில் பல்வேறு அரசியல் தலைவர்கள் விளையாட்டு வீரர்கள் திரைத் துறையினர் மற்றும் தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

Advertisement

ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தில் ஸ்ரீராமரின் குழந்தை பருவ சிலையான ராம் லாலா பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. இந்த கும்பாபிஷேக நிகழ்வில் 121 அர்ச்சகர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடுகள் செய்ய உள்ளனர். மேலும் ராம் லாலாவின் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு பிரதமர் மோடி தலைமையேற்று நடத்த இருக்கிறார். இந்த நிகழ்விற்காக 11 நாட்கள் கடுமையான விரதங்கள் மற்றும் உணவு கட்டுப்பாடுகளையும் பின்பற்றி வருகிறார் பிரதமர் மோடி.

வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கும் பிரதமர் மோடி கும்பாபிஷேக நிகழ்வு நடந்து முடியும் வரை ஆடம்பர கட்டில் மெத்தைகளை தவிர்த்து மரக்கட்டிலில் வெறும் போர்வை விரித்து படுத்து உறங்குகிறார். இந்த விழாவிற்காக சிறப்பு தியானங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை பின்பற்றி வருவதாகவும் பிரதமருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . கும்பாபிஷேக நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக விசேஷமான சாத்வீக உணவுகளை ஒன்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தினமும் தேங்காய் தண்ணீர் குடித்து பழங்களை மட்டுமே அவர் சாப்பிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

Tags :
Advertisement