PM Kisan Yojana|19வது தவணை எப்போது கிடைக்கும்?. யார் யார் தகுதியானவர்கள்?
PM Kisan Yojana: பிரதம மந்திரி கிசான் யோஜனா 19வது தவணை: பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (பிரதான் மந்திரி கிசான் யோஜனா) திட்டத்தின் கீழ், அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்குகிறது. இந்த பணம் Direct Benefit Transfer (டிபிடி) மூலம் விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை 18 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 19வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
பிரதம மந்திரி கிசான் 19வது தவணை எப்போது வரும்?: முந்தைய, அதாவது 18வது தவணை அக்டோபரில் வெளியிடப்பட்டது. அதன்படி, 19வது தவணை பிப்ரவரியில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி 16வது தவணை வெளியான நிலையில், இம்முறையும் பிப்ரவரி 28ஆம் தேதி 19வது தவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், பிப்ரவரி மாதத்துடன் நான்கு மாத கால அவகாசம் முடிவடைகிறது.
இத்திட்டத்தால் எந்தெந்த விவசாயிகள் பயனடைவார்கள்?: கீழ்க்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் பலன் கிடைக்கும். விவசாயிகள் அரசு வேலை செய்யக்கூடாது. வருமான வரி செலுத்தும் விவசாயிகள் இத்திட்டத்தால் பயனடைய மாட்டார்கள். அதேபோல், குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இத்திட்டத்தின் பலன் கிடைக்கும்.
மேலும், e-KYC செயல்முறையை முடிக்காத விவசாயிகளுக்கு அடுத்த தவணை கிடைக்காது. இந்தத் திட்டத்திற்கு நீங்கள் தகுதியுள்ளவரா என்பதை அறிய, அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது இந்த எண்களில் கிசான் யோஜனாவை தொடர்பு கொள்ளலாம். அதேபோல், விவசாயிகள் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால், இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் விவசாயிகள் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.
Readmore: மகிழ்ச்சி..! கிராமிய கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்வு…! முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!