மீண்டும் அதிர்ச்சி!!! பல்கலைக்கழக வளாகத்தில், ஆண் நண்பருடன் தனியாக பேசிக்கொண்டிருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை..
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஆம், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், வட மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் பயின்று வருகிறார். இவர் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மாணவி தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த இடத்திற்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், இரவில் எதற்கு தனியாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட மாணவரை, அந்த கும்பல் தாக்கியது மட்டும் இல்லாமல், மாணவிக்கு மூன்று பேரும் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவர் கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, மாணவி அலறி கூச்சலிட்டதால், அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்துள்ளது. இதையடுத்து, படுகாயம் அடைந்த மாணவி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, விடுதிக்கு திரும்பியுள்ளார். ஆனால் அவர் காவல்துறையில் புகார் அளிக்காமல் இருந்துள்ளார். ஆனால் அவர் இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியதில் பாலியல் தொல்லை கொடுத்த மூன்று பேரில், ஒருவர் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருபவர் என்பது தெரியவந்துள்ளது. மீண்டும் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Read more: தாயின் போனில் இருந்த ஆபாச வீடியோவை பார்த்து, 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன்!!!