PM Kisan Samman Nidhi Yojana| 16-வது தவணை தேதி அறிவிப்பு.! முழு விவரங்கள்.!
பிப்ரவரி 28, 2024 அன்று, பிரதமர் PM Kisan Samman Nidhi Yojana திட்டத்தின் 16வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா அரசின் முன்முயற்சியாக நிறுவப்பட்டுள்ளது.
இந்த முன்னோடி திட்டம் நிதி பிரச்சினையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நம்பகமான வருமானம் மற்றும் நிதி ரீதியான பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் ஒரு வருடத்திற்கு 6000 ரூபாய் உதவித்தொகையை அரசிடம் இருந்து பெறுகிறார்கள். 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளில் இந்த உதவித்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
PM கிசான் திட்டத்தின் மூலம் பயன்பெறுவதற்கு சொந்தமாக விவசாய நிலத்தை வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமே தகுதியுடையவர்கள். அதே நேரத்தில் வரி செலுத்துவோர் இந்தத் திட்டத்தில் இணைய முடியாது. PM Kisan இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவலின்படி இந்தத் திட்டத்தில் பதிவு செய்திருக்கும் விவசாயிகள் கண்டிப்பாக eKYC பதிவு செய்திருக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் செல்போன் எண் மற்றும் OTP சரி பார்க்கப்படுகிறது.மேலும் eKYC சேவைகளை PM Kisan Portal அல்லது அருகிலுள்ள பொது சேவை மையங்களில் பெறலாம்.
இந்தத் திட்டத்தின் மூலம் பலன் அடையும் விவசாயிகள் தங்களது அதார் கார்டுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் பணம் பெறுவதை உறுதி செய்வதற்கும் இடைத்தரகர்கள் இந்தத் திட்டத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்கும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த முறை கிசான் யோஜனா திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதோடு திட்டம் தவறாக பயன்படுத்துவதை தடுக்க உதவுகிறது. மேலும் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் திட்டத்தின் உண்மையான பலனை அடைவதையும் உறுதி செய்கிறது.
English Summary: PM Kisan Samman Nidhi yojana's 16th installment dates announced. Feb 28th pm Modi will release the installments.