PM Kisaan 2024 : விவசாயிகளுக்கு 16-வது தவணை ரூ.2,000 நேரடியாக வங்கி கணக்கில் இன்று செலுத்தப்படும்...!
மத்திய அரசு விவசாய தொழிலுக்கு உதவும் வகையில், பி.எம் கிசான் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ரூ.6,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 3 தவணைகளாக ரூ .2,000 உதவித்தொகை வழங்கபபடுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை முதல் தவணை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலகட்டத்திலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரையிலான காலக்கட்டத்திலும் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 15 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 15-வது தவணையாக ரூ.2000 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் 16-வது தவணை பிரதமர் மோடி மகராஷ்ட்ரா மாநிலம் யவாத்மால் மாவட்டத்திலிருந்து வெளியிடுவார் என PM-KISAN-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary : PM Kisaan 2024 : 16th installment of Rs.2,000 to farmers to be paid directly into bank account today