அசத்தும் இந்தியா...! விரைவில் ஒரு புதிய ரக போர் விமானத்தை களம் இறக்க திட்டம்..!
இந்திய விமானப் படையில் தேஜஸ் மார்க் 1 ரக விமானம் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன. இதைத் தொடர்ந்து தேஜஸ் எம்.கே.1 ரக விமானங்கள் விரைவில் விமானப்படையில் சேர்க்கப் பட உள்ளன. இந்த போர் விமானங்களில் டிஜிட்டல் ரேடார், வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், ஜாமர் உள்ளிட்ட அதிநவீன கருவிகள், ஆயுதங்கள் இடம்பெற்றிருக்கும்.
விமானப்படையில் பழைய போர் விமானங்கள் படிப்படியாக அகற்றப்பட்டு அவற்றுக்கு பதிலாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் ரக போர் விமானங்கள் சேர்க்கப்படுகின்றன. விமானப் படையில் தற்போது 30 தேஜஸ் ரக விமானங்கள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டில் 83 தேஜஸ் எம்.கே.1 ரக விமானங்களை வாங்க HAL நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. தற்போது புதிதாக 97 தேஜஸ் ரக விமானங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. அடுத்த 4 ஆண்டுகளில் புதிய போர் விமானங்கள் படையில் சேர்க்கப்படும்.
இந்த வகை விமானங்கள் ஒற்றை என்ஜின் கொண்டது. 4000 கிலோ எடை கொண்ட இந்த விமானம் அதிகபட்சமாக 130000 கிலோ வரை எடையை எடுத்துக்கொண்டு பறக்க முடியும். இந்த விமானங்கள் மிக் 21, மிக் 23 மற்றும் மிக் 27 ஆகிய விமானங்களுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டது. லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட் என அழைக்கப்படும் தேஜஸ் ஒரு சூப்பர் சோனிக் விமானமாகும். 1984- ம் ஆண்டு இந்த விமானத்தை உருவாக்கும் பணி தொடங்கியது. இந்த ஆண்டுதான் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சியை (ADA) மத்திய அரசு தொடங்கியது. இதற்கு முன்னர் இருந்த மிக் 21 விமானத்தை தொடர்ந்து இது உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.