For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சவுக்கு சங்கரை கொலை செய்ய திட்டம்..? வேண்டுமென்றே செஞ்சா மாதிரி இருக்கு..!! அதிமுக சந்தேகம்..!!

11:13 AM May 04, 2024 IST | Chella
சவுக்கு சங்கரை கொலை செய்ய திட்டம்    வேண்டுமென்றே செஞ்சா மாதிரி இருக்கு     அதிமுக சந்தேகம்
Advertisement

பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரின் வாகனம் விபத்துக்குள்ளானது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது.

Advertisement

சவுக்கு சங்கர், சவுக்கு மீடியா எனும் யூடியூப் சேனலை ஆரம்பித்து தமிழக அரசுக்கு எதிராகவும், அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார். மேலும், முதல்வர் முக.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

இதற்கிடையே, அவரது நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்கள் சிலரை போலீசார் கைது செய்தனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று சவுக்கு சங்கர் குற்றம்சாட்டி வந்தார். அவருக்கு ஆதரவாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்து வந்தன. இந்நிலையில், பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.

தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை, நள்ளிரவு 3 மணியளவில் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்நிலையில், சவுக்கு சங்கரை அழைத்துச் செல்லும் போலீஸ் வாகனம் விபத்துக்குள்ளானது குறித்து அதிமுக பிரமுகர் காயத்ரி ரகுராம், தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆனால் ஒரு நபரை முடிக்க இவ்வளவு முயற்சி எடுக்கப்படுகிறது. தி.மு.க.வுக்கு இவ்வளவு insecurity உள்ளதாக நான் ஆரம்பத்தில் நம்பவில்லை. சவுக்கு சங்கர் stay safe.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, மோகன் பாபு என்பவர், “சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது. சவுக்கு சங்கர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்! இதெல்லாம் சரியில்லை! வேண்டும் என்றே செஞ்சா மாதிரி இருக்கு. ஒரு அளவுதான் எல்லாமே முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ! படத்துல பார்ப்பதுபோல் இருக்கு இதெல்லாம் ! எனக் குறிப்பிட்டுள்ளார்.

Read More : ஹேக்கர்களிடம் இருந்து உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்..!! இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க..!!

Advertisement