Mirror Vastu Tips | வீட்டின் இந்த திசையில் கண்ணாடியை வைத்தால் துன்பம் பெருகுமாம்..!!
கண்ணாடி மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது. எனவேதான் கோவில் விஷேசங்கள், வீட்டு விஷேசங்களில் பங்கேற்க வருபவர்களுக்கு கண்ணாடியை பரிசாக தருவார்கள். நம்முடைய வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியை நாம் எந்த திசையில் மாட்டி வைத்திருக்கிறோம் எப்படி பராமரிக்கிறோம் என்பதை பொறுத்து நமக்கு செல்வ வளம் அதிகரிக்கும். பொருளாதார நிலையும் உயருமாம். அதே நேரம் தவறான திசைகளில் கண்ணாடிகளை வைக்கும் போது வீட்டில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
வாஸ்து சாஸ்திரப்படி நாம் கண்ணாடியை எங்கு வைக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். வீட்டிற்கு கண்ணாடி வாங்கும் போது சூரியன் இருக்கும் பகல் நேரத்தில்தான் வாங்க வேண்டும். சூரியன் மறைந்த பிறகு ஒருபோதும் கண்ணாடி வாங்கக் கூடாது. கண்ணாடியின் பிரேம் பொதுவாக இள நிற வண்ணங்களில் இருப்பது சிறப்பானது. சந்தன நிறம், வெண்மை, இளம் சிவப்பு, இளம் பச்சை நிற பிரேம்கள் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.
கண்ணாடியை நாம் அடிக்கடி சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். ஒருபோதும் கவனக்குறைவாக கையாண்டு அதை உடைத்து விடக்கூடாது. வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடி உடைவது நல்லதல்ல. வாஸ்து சாஸ்து சாஸ்திரப்படி கண்ணாடியை சரியான திசையில் மாட்ட வேண்டும். நம் வீட்டில் இருக்கும் கண்ணாடியை சரியான இடத்தில், சரியான திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும். கண்ணாடியானது நல்ல சக்தியை வரவேற்கும் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும்.
எங்கு வைக்க கூடாது? மேற்கு அல்லது தெற்கு சுவர்களில் கண்ணாடி வைப்பதை தவிர்க்க வேண்டும். இது குடும்ப வாழ்க்கையில் அமைதியின்மையை ஏற்படுத்தும். சமையலறையில் கண்ணாடியை நிறுவுவது நல்லதாக கருதப்படுவதில்லை. இதனால் உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்தும். படுக்கையறையில் கண்ணாடிகள் நிறுவப்படக்கூடாது. கண்ணாடியில் படுக்கையின் பிரதிபலிப்பு வாஸ்து குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. அதேசமயம் ஸ்டோர் ரூமில் கண்ணாடி வைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Read more ; மாநாடு முடிந்து வீட்டிற்கு பத்திரமாக செல்லுங்கள்..!! – தவெக தலைவர் விஜய் வேண்டுகொள்