முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வேளாண் துறையில் முன்னோடி..!! கடைசி வரை இயற்கை விவசாயம்..!! பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி..!!

Pappammal's grandmother from the Padma Shri Award by the Central Government has passed away due to many achievements in natural agriculture. He is 109 years old
10:02 AM Sep 28, 2024 IST | Chella
Advertisement

இயற்கை விவசாயத்தில் பல சாதனைகளை புரிந்ததற்காக மத்திய அரசால் பத்மஸ்ரீ விருது பெற்ற கோவையை சேர்ந்த பாப்பம்மாள் பாட்டி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 109

Advertisement

ரங்கம்மாள் என்ற இயற்பெயர் கொண்ட எம். பாப்பம்மாள், கடந்த 1914ஆம் ஆண்டு தேவராயபுரம் என்று ஊரில் பிறந்தார். இளம் வயதிலேயே தன்னுடைய பெற்றோரை இழந்த இவர், தனது இரண்டு சகோதரிகளோடு வளர்ந்து வந்தார். கோவையில் தன்னுடைய பாட்டியின் உதவியோடு ஒரு சிறிய உணவகத்தை நடத்தி வந்த இவர், அதில் நல்ல லாபத்தை சம்பாதித்து வந்தார்.

இதையடுத்து, கோவை அருகே சுமார் 10 ஏக்கர் நிலத்தை வாங்கி, அதில் விவசாயம் செய்ய ஆரம்பித்தர். காலை 5 மணிக்கு எழுந்து தனது வயலுக்கு செல்லும் பாப்பம்மாள், இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே எடுத்துக் கொண்டு அதையே தன்னுடைய சந்ததிக்கும் எடுத்துச் சென்றார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் வாழை இலையில் மட்டுமே உணவு உண்ணும் பழக்கத்தை கொண்டவர் பாப்பம்மாள்.

மேலும், கடந்த 1959இல் தக்கம்பட்டி பஞ்சாயத்தில் வார்டு மெம்பராகவும் இருந்துள்ளார். காரமடை பஞ்சாயத்து யூனியனின் கவுன்சிலராகவும் சில காலம் பதவி வகித்துள்ளார். இவர், அரசியல் கட்சிகளிலும் இணைந்து பணியாற்றியுள்ளார். இவருடைய இயற்கை விவசாயத்தை கண்டு வியந்து போன மத்திய அரசு, இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

இந்நிலையில் தான், கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த பாப்பம்மாள், செப்.27ஆம் தேதி காலை காலமானார். இவருடைய மறைவுக்கு முதல்வர் முக.ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்களும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கழக முன்னோடியும் - கடந்த 17-ஆம் நாள் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்றவருமான திருமிகு. பாப்பம்மாள் அவர்கள் 108 அகவையில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து கலங்கினேன்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் மீதும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீதும் பற்றுக் கொண்டு, கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் தன்னை இயக்கத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றியவர். 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டம் தொடங்கி, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்க நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வரை அத்தனை போராட்டக்களங்களையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர் அவர்.

1959-ஆம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமிகு. பாப்பம்மாள் அவர்கள், 1964-இல் காரமடை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராகவும், பின்னர் தேக்கம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்று பணியாற்றினார். 1970-ஆம் ஆண்டு தொடங்கி 45 ஆண்டுகாலம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக உழவர் விவாதக்குழு உறுப்பினராகச் செயல்பட்டார். 1965-ஆம் ஆண்டிலேயே மாதர் சங்கத் தலைவராகச் செயல்பட்டு, கிராமப் பெண்களின் முன்னேற்றத்துக்கான சமூகப் பணிகளை மேற்கொண்டார்.

தனது இறுதிமூச்சு வரையில், சுறுசுறுப்பாக வயலில் இறங்கி வேளாண் பணிகள் செய்து வந்தவர் திருமிகு. பாப்பம்மாள் அவர்கள். திருமிகு. பாப்பம்மாள் அவர்களின் வாழ்வையும், தொண்டையும் போற்றும் வகையில் ஒன்றிய அரசு சார்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது. அப்போது, “உற்சாகத்துடனும், கொள்கை உணர்வோடும் எப்பொழுதும் புன்னகை மாறாத பாப்பம்மாள் பாட்டி நமக்கெல்லாம் உந்துசக்தி!" என்று அவரை வாழ்த்தினேன்.

கழக முப்பெரும் விழாவில், “ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் அடையாளம்" என அவரை மனம் நெகிழப் பாராட்டி மகிழ்ந்திருந்தேன். ஆனால் இன்று சொல்லொணாத் துயரத்தில் நம்மையெல்லாம் ஆழ்த்தி விட்டு அவர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார். அண்ணா அறிவாலயத்திலும், எனது இல்லத்திலும் திருமிகு. பாப்பம்மாள் அவர்களைச் சந்தித்து உரையாடிய ஒவ்வொரு தருணமும் என் நெஞ்சில் எப்போதும் நீங்காமல் பசுமையாக இருக்கும்.

என் குடும்பத்தில் ஒருவரைப் பிரிந்த வலியுடன் தவிக்கிறேன். திருமிகு. பாப்பம்மாள் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், கழக உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வேளாண் துறையில் முன்னோடியாக விளங்கிய, மதிப்புக்குரிய பாப்பம்மாள் பாட்டி அவர்கள், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாப்பம்மாள் பாட்டி அவர்கள் ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, தமது 109 வயது வரை தொடர்ந்து விவசாயப் பணிகள் மேற்கொண்ட பாப்பம்மாள் பாட்டி அவர்களுக்கு, பத்மஶ்ரீ விருது அளித்துப் பெருமைப்படுத்தியதோடு, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் நேரில் சந்தித்து ஆசியும் பெற்றது குறிப்பிடத்தக்கது. பாப்பம்மாள் பாட்டி அவர்களின் வாழ்க்கை, இளைய தலைமுறையினருக்கு பெரும் எடுத்துக்காட்டாகும். அவரது புகழ் தொடர்ந்து நிலைத்திருக்கும்.

Read More : இது மட்டும் நடந்தால் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயரும்..!! பெண்களுக்கு செம குட் நியூஸ்..!!

Tags :
இயற்கை விவசாயம்இரங்கல்பாப்பம்மாள் பாட்டிமத்திய அரசு
Advertisement
Next Article