செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் முகப்பருக்கள்.. குணப்படுத்த முடியுமா? நிபுணர்கள் அளித்த அதிர்ச்சி தகவல்..
தற்போது உள்ள கால சூழலில் பல பிரச்சனைகள் ஏற்பட காரணம் என்ன என்றே தெரியாமல் நாம் ஏதோ ஒன்று செய்து கொண்டிருப்போம். உதரணமாக, உடம்பில் உள்ள ஒரு சில சத்துக்கள் குறைந்தால் முகப்பரு ஏற்படும், எண்ணெயில் பொறித்த உணவுகளை அதிகம் சாப்பிடும் போது முகப்பரு ஏற்படும். ஆனால் நாம் பருக்களை சரி செய்ய ஆரோக்கியத்தின் மேல் கவனம் செலுத்தாமல் கண்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்துவோம். இப்படி செய்வதால் எந்த பலனும் இருக்காது. இதனால் உடம்பில் ஒரு பிரச்சனை ஏன் வருகிறது என்பதை அறிந்து அதன் பிறகு தான் நாம் அதற்கு தீர்வு காண முடியும். அந்த வகையில் முகப்பரு ஏற்படுவது குறித்து நிபுணர்கள் கூறிய தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆம், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் அதிக நேரம் செலவிடுவதால் மன அழுத்தம் ஏற்பட்டு, அதன் காரணமாக முகப்பரு பிரச்சனை உருவாகும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மின்னணு சாதனங்கள் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், தேவையான நேரத்தில் மட்டுமே செல்போன் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்போன் பயன்படுத்துவதால் ஏற்கனவே கண்கள் மற்றும் காதுகளுக்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது முகப்பரு ஏற்படவும் செல்போனே காரணம் எனும் ஆய்வு அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த காரணத்தால் ஏற்படும் முகப்பருக்கள் முகத்தில் என்ன தடவினாலும் சரி செய்ய முடியாது. இதற்கு ஒரே தீர்வு செல்போன் பயன்படுத்துவதை குறைத்து, ஆரோக்கியமான உணவு பழக்கங்களை சாப்பிடுவது தான். அந்த வகையில், எண்ணெயில் பொறித்த உணவுகள் மற்றும் குளிர் பானங்களை தவிர்த்தால் பருக்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். அதேசமயம், வைட்டமின் ஏ அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்வது உங்கள் சருமத்திற்கு நல்லது. ஆரோக்கியமான, பருக்கள் இல்லாத சருமத்திற்கு தினசரி உடற்பயிற்சி, தியானம், நடைபயிற்சி போன்றவற்றில் ஈடுபடுவது அவசியம். மேலும், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை குறைத்துக்கொண்டால், முகப்பரு வராமல் தடுக்கலாம்.
Read more: மஞ்சள் நிற பற்கள் வெள்ளையாக மாற, வீட்டிலேயே பேஸ்ட் தயாரிக்கலாம்.. எப்படி தெரியுமா?