காவி உடை.. நெற்றியில் பொட்டு.. மகாகும்ப மேளாவில் கிரிக்கெட் பிரபலங்கள்..!! - வைரலாகும் போட்டோ
கும்பமேளாவுக்குச் செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் எப்படி இருப்பார்கள் என்று AI உருவாக்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. MS தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் பலர் கும்பமேளாவிற்கு காவி உடையில் வருகை தருவதைக் காட்டும் இந்த படங்களை இன்ஸ்டாகிராமில் பாரத் ஆர்மி பகிர்ந்துள்ளது.
டீம் இந்தியா ஆதரவாளர்களின் குழுவான 'தி பாரத் ஆர்மி' கும்பமேளாவுக்குச் கிரிக்கெட் வீரர்கள் சென்றால் எப்படி இருக்கும் என்பதை இந்த AI உதவியுடன் புகைப்படங்களை உருவாக்கியுள்ளனர். ஜெனரேட்டிவ் AI உதவியுடன் உருவாக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் இப்போது சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. உண்மையில் எது உண்மை எது செயற்கையானது என்பதை புரிந்து கொள்ள முடியாத நிலை உருவாகி வருகிறது.
எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் கும்பமேளாவுக்கு காவி உடையில் சென்றது போல் இந்த புகைப்படங்களை உருவாக்கியுள்ளனர். 'கிரிக்கெட் வீரர்கள் மகா கும்பமேளாவுக்குச் சென்றால்' என்ற தலைப்பில் பாரத் ஆர்மி இவற்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது.
Read more : சென்னை லயோலா கல்லூரியில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!!