இனி வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் தான் வேலை.. சம்பளம் குறையுமா..? - பட்ஜெட் மீது எகிறும் எதிர்பார்ப்பு
2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் எத்தகைய அறிவிப்புகள் வரலாம் என்பது தொடர்பாக அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் பட்ஜெட்டில் படிப்படியாக தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தும் திட்டத்தை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே பணி செய்யும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த விதியின் நோக்கம் ஊழியர்களின் வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையை உருவாக்குவதாகும். வரும் பட்ஜெட்டில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்றும், படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாரத்திற்கு 5 நாட்களுக்கு பதிலாக 5 நாட்கள் மட்டும் பணி செய்ய விரும்புவோர் வழக்கத்தை விட குறைவான சம்பளத்தையே பெருவார்கள் எனக் கூறப்படுகிறது. வாரத்தில் நான்கு நாட்கள் வேலை செய்யும் விதி வேலை நேரத்தை அதிகரிக்கும். மேலும் இந்த பட்ஜெட்டில் வருமான வரி விதிப்பு முறை, புதிய வருமான வரி மசோதா உள்ளிட்ட பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடம் அதிகரித்துள்ளது.
Read more : புதுச்சேரி பெண் நெல்லையில் கூட்டு பலாத்காரம்.. பின்னணியில் பகீர்..!!