For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பரபரப்பு.! "ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடையா.?" அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு.!

12:26 PM Jan 17, 2024 IST | 1newsnationuser7
பரபரப்பு    ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடையா    அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
Advertisement

உத்திரபிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு முன்பு நடைபெறக்கூடிய சம்பிரதாயங்கள் மற்றும் சடங்குகள் நேற்று இருந்து துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்க கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த ஓலா தாஸ் என்ற நபர் இந்த பொதுநல வழக்கை பதிவு செய்திருக்கிறார். சங்கராச்சாரியார்கள் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை நிராகரித்ததற்கான காரணத்தை மேற்கோள் காட்டி இந்த பொதுநல வழக்கை தொடர்ந்திருக்கிறார்.

மேலும் இந்த மனுவில் " வருகின்ற 22 ஆம் தேதி உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தி நகரில் மதம் சார்ந்த நிகழ்வு நடைபெற இருக்கிறது. ஸ்ரீராமரின் குழந்தை சிலை புதிதாக கட்டப்பட்டு கொண்டிருக்கும் ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்வை பிரதமர் மோடி மற்றும் உத்திரபிரதேசம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் நடத்த இருக்கின்றனர். இந்த நிகழ்விற்கு சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு கும்பாபிஷேக விழாவையும் நிராகரித்துள்ளனர். மேலும் அமங்கள மாதமாக கருதப்படும் 'பவுஸ்' மாதத்தில் இந்து மதம் சார்ந்த எந்த விழாக்களும் நடத்தப்படுவதில்லை'.

முழுமையாக கட்டி முடிக்கப்படாத கோவிலில் தெய்வங்களின் சிலைகள் மற்றும் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்படக்கூடாது என்பது சாஸ்திரமாக உள்ளது. மேலும் இந்த நிகழ்வு சனாதன சம்பிரதாயம் மற்றும் சனாதன தர்மத்திற்கு எதிராக நடைபெறும் ஒரு நிகழ்வு. இது 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலை குறி வைத்து நடத்தப்படும் ஓட்டுக்கான ஒரு நிகழ்வு எனவே இந்த கும்பாபிஷேக விழாவிற்கு தடை விதிக்க வேண்டும்" என அந்த மனுவில் குறிப்பிட்ட போட்டிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement