தோசை மாவில் பூச்சிக்கொல்லி மருந்து..!! தாய், காதலி போட்ட ஸ்கெட்ச்..!! விசாரணையில் வெளிவந்த ஷாக்கிங் தகவல்..!!
விழுப்புரம் மாவட்டம் வளவனூரை அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் விஸ்வலிங்கம் (வயது 29). இவர், லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில், ஜனவரி 17ஆம் தேதி வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். விஸ்வலிங்கத்தின் மரணத்தை மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின் பேரில் அவரது தாய் முனியம்மாள், அவருடன் குடித்தனம் நடத்தி வந்த காதலி செல்வி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
தோசை மாவில் பூச்சிக்கொல்லி மருந்து
விஸ்வலிங்கம் மதுபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இவர், தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இவரது டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், விஸ்வலிங்கத்தை கொலை செய்ய அவரது தாய் மற்றும் காதலி செல்வி ஆகியோர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, தோசை மாவில் பூச்சிக் கொல்லி மருந்தை கலந்து, விஸ்வலிங்கத்திற்கு தோசை சுட்டு கொடுத்துள்ளனர்.
கொலை வழக்காக பதிவு
இதை ஆசையாக சாப்பிட்ட விஸ்வலிங்கம் மயக்கமடைந்து உயிரிழந்தார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தாய், காதலி இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.