4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 62 வயது முதியவர்; சாலையோரம் உள்ள தள்ளு வண்டி கடையில் நடந்த கொடூரம்!!
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே 4 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் தாயார் சாலையோரம் தள்ளு வண்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவரது கடைக்கு 62 வயதான சண்முகம் என்ற முதியவர் ஒருவர், உதவி செய்வதாக கூறி கடந்த சில நாட்களாக கடைக்கு வந்துள்ளார். இந்நிலையில், சிறுமியின் தாயார் கடையில் இல்லாத போது, சண்முகம் அவரது குழந்தையான 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், உடனடியாக சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, போலீசார், 62 வயதான சண்முகம் என்பவரை கைது செய்துள்ளனர்.
62 வயது முதியவர், தனது பேத்தி வயதில் உள்ள நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சிறுமிக்கு கூட தற்போது தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற சூழல் உருவாகி உள்ளதால், பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர் பெரும் அச்சத்தில் உள்ளனர்.