"ஒருபக்கம் பெரியார்; மறுபக்கம் பிரச்சாரம்"..!! "குறுக்க இந்த கௌசிக் வந்தா மொமண்ட்"..!! ஆதாரத்துடன் வந்த விஜயலட்சுமி..!!
பிரபாகரனை பற்றி கிண்டல் கேலியாக சீமான் என்னிடம் பேசிய ஆடியோ இருப்பதாக நடிகை விஜயலட்சுமி பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசியுள்ள அவர், ”நேற்று பிரபாகரனின் அண்ணன் மகனை சீமான் எவ்வளவு கேவலமாக பேசினார் என்பதை நாம் அனைவரும் கேட்டிருப்போம். அவருக்கு கோபம் வந்தால் பிரபாகரனையே குண்டு மகன் என்று உருவ கேலி செய்வார். இதற்கான ஆதாரம் என் போனில் இருந்தது. ஆனால், அது காவல்துறையிடம் சிக்கிக் கொண்டது. இன்றைக்கு அந்த போன் மட்டும் என்னிடம் இருந்திருந்தால், உலகமே அதிர்ச்சி அடைந்திருக்கும்.
சீமான் நேற்று பத்திரிகையாளர்களிடம் எனது மகனுக்கு பிரபாகரன் தான் பெரியப்பா என்று சொன்னார். அந்த குழந்தை மீது சத்தியம் செய்து சொல்லுங்கள் சீமான், தலைவர் பிரபாகரனை நீங்கள் ஒருபோதும் உருவகேலி செய்து பேசவில்லையா..? சிவபெருமான் மீது நான் சத்தியம் செய்வேன். இந்த வார்த்தையை என் காதால் கேட்டேன். சீமானுக்கு மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ண வேண்டும் என்கிற எந்த எண்ணமும் கிடையாது. பிரபாகரனை கொச்சைப்படுத்தி கொண்டு பணம் சம்பாதித்து வருகிறார்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.