தொடங்கியது பெரியார் பேரன்களின் பயணம்… குமரி முனையில் உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு கிலோமீட்டர் இருசக்கர வாகன பேரணி இன்று கன்னியாகுமரியில் இருந்து துவங்கியது. இந்தப் பேரணி தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகள் 54 பிரச்சாரம் மையங்களுக்கு செல்ல இருக்கிறது.
இந்தப் பேரணையின் போது பல லட்சக்கணக்கான இளைஞர்களையும் இவர்கள் சந்திக்க இருக்கிறார்கள். இன்று தொடங்கி இருக்கும் இந்த பயணம் வருகின்ற 27ஆம் தேதி முடிவடையும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளான இன்று கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் மேற்கொள்ள இருக்கும் லட்சியப்பேரரடி இது எனவும் தெரிவித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
திமுக இளைஞரணியின் சார்பாக மாநில மீட்பு கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதனை முன்னிட்டு இளைஞர்களின் இந்த எழுச்சிமிக்க இருசக்கர வாகன பேரணி நடைபெற இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பேரணியின் மூலம் பாசிசத்தை விரட்டியடிக்கவும் மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும் அனைவரும் உறுதி ஏற்போம் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் உதயநிதி ஸ்டாலின்" கோட்சே தூக்கிலிடப்பட்ட இந்த நாளில் பெரியாரின் பேரன்கள் காந்தி மண்டபத்தை விட்டு வெளியேறுகிறார்கள் பாசிச எதிர்ப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு ஆகியவற்றிற்கு உறுதிமொழி ஏற்பதற்காக இந்தப் பேரணி என தனது உணர்ச்சிமிக்க கருத்தை பதிவு செய்துள்ளார்.