இவர்கள் எல்லாம் கீரை சாப்பிடவே கூடாது.. மீறினால் வரும் பிரச்சனை!!!
ஆரோக்கியமான உணவுகளில் கீரை முக்கியமான ஒன்று. எல்லாவித கீரையிலும் மருத்துவ குணங்கள் உள்ளது. கீரைகளில் அதிகப்படியான இரும்புச் சத்துக்கள் இருப்பதால், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த கீரை உதவும். அது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கீரையை அடிக்கடி நம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் மற்றும் பெருங்குடலில் இருந்து நச்சுகளை அகற்ற மிகவும் உதவியாக இருக்கிறது. கீரையில், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோநியூட்ரியன்கள் போதுமான அளவு உள்ளது.
மேலும், கீரை சாப்பிடுவதால் இரத்த சோகை நீங்குகிறது. கீரையில் ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதால், இது சருமத்தில் இறுக்கத்தை ஏற்படுத்தி சுருக்கங்களைத் தடுக்கிறது. அதனால் பெண்கள் முகத்தின் இயற்கையான அழகையும் பளபளப்பினையும் அதிகரிக்க விரும்பினால், அவர்கள் தொடர்ந்து கீரை சாற்றை உட்கொள்ளுதல் அவசியம் ஆகும். மேலும், நீரிழிவு நோயாளிகளின் இரத்த குளுக்கோஸ் கட்டுப்பாட்டை மேம்படுத்த கீரை உதவும். அது மட்டும் இல்லாமல், புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் சக்தி கீரைக்கு உண்டு.
இப்படி கீரையில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. ஆனால், கீரை ஒரு சிலருக்கு தீங்கு விளைவிக்கும். ஆம், உண்மை தான். கீரையில் அதிகம் உள்ள ப்யூரின், நமது உடலில் உள்ள யூரிக் அமில அளவை அதிகரித்து விடும். அப்படி உடலில் உள்ள யூரிக் அமில அளவு அதிகரித்தால் மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் குறிப்பாக யூரிக் அமில அளவு ஏற்கனவே அதிகமாக உள்ளவர்கள் கீரையை கட்டாயம் அதிக அளவு எடுத்துக்கொள்ள கூடாது. மேலும், கீரையில் உள்ள ஆக்சலேட்டுகள் சிலருக்கு சிறுநீரக கற்களை உண்டாக்கிவிடும். அதனால் அவர்கள் கீரையை தவிர்ப்பது நல்லது.
Read more: “எனக்கு அம்மா வேணும் பா” கதறி துடித்த 4 வயது சிறுவன்; போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..