மாற்றுத்திறனாளிகளே எச்சரிக்கை!… அசிஸ்டிவ் டெக்னாலஜிகள் மூலம் ஆன்லைன் மோசடிகள்!… தப்பிப்பது எப்படி?
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய ஒரு சில அசிஸ்டிவ் டெக்னாலஜிகள் மூலமாக அவர்கள் சைபர் மோசடிக்கு ஆளாவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளிடையே சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது அல்லது அதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு அவர்கள் போதுமான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளாததே இதற்கு காரணம். மாற்றுத்திறனாளிகளை நோக்கி பிஷிங் அட்டாக்குகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மோசடிக்காரர்கள் தங்களை அதிகாரப்பூர்வ ரெப்ரசன்டேட்டிவ்களைப் போல சித்தரித்துக் கொண்டு மாற்றுத்திறனாளிகளை மோசடிகளில் சிக்க வைக்கின்றனர்.
மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்ட நபருக்கு போன் கால் செய்தோ அல்லது இமெயில் மூலமாகவோ அவர்களை தொடர்பு கொண்டு அவர்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரித்துக் கொள்கின்றனர். வீட்டில் இருந்து வேலை செய்தபடியே கூடுதல் வருமானம் சம்பாதிக்கலாம் என்பது போன்ற ஆஃபர்களை வழங்குவதன் மூலமாக மோசடிக்காரர்கள் வேலை செய்கிறார்கள். ஆன்லைன் மோசடியில் இருந்து மாற்றுதிறனாளிகள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு உதவக்கூடிய சில குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம்.
மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில டிப்ஸ்: தெரியாத ஒரு நபருடன் பேசும் பொழுது அல்லது ஆன்லைனில் பிசினஸ் செய்யும் பொழுதோ அல்லது பிறருடன் போனில் பேசும் பொழுதோ ரகசியத்திற்கு உட்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். மறுபக்கம் பேசக்கூடிய நபர் யார் என்பதை முழுமையாக அறிந்து கொள்ளாமல் அவர்களிடம் OTP, பாஸ்வேர்ட் போன்ற விஷயங்களை ஷேர் செய்யாதீர்கள்.
தற்போது நடந்து கொண்டிருக்க கூடிய பல்வேறு அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புணர்வாக இருக்கவும். ஒரு மோசடியை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்த விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். ஒருவேளை ஏதேனும் ஒரு மோசடியில் நீங்கள் மாட்டிக் கொண்டால், உடனடியாக 1930 என்ற எண்ணை அழைக்கவும். சந்தேகத்திற்கு உட்பட்ட லிங்குகள் மற்றும் அட்டாச்மென்ட்களை கிளிக் செய்ய வேண்டாம்.
சாட்கள், இமெயில் மற்றும் சோஷியல் மீடியா பிளாட்ஃபார்ம்கள் மூலமாக பெறப்பட்ட எந்த ஒரு அப்ளிகேஷனையும் உங்களது சாதனங்களில் டவுன்லோட் செய்யாதீர்கள். நீங்கள் சைபர் மோசடிக்கு ஆளாகி விட்டீர்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்குமாயின் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளியுங்கள். அவர்களது வெப்சைட்டுகள் மற்றும் நெட்வொர்க்குகளில் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துதல் வேண்டும்.