திடீரென மருத்துவமனைகளுக்கு படையெடுக்கும் சென்னை மக்கள்..!! என்ன பிரச்சனை..? எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுவாசப்பாதை தொற்றுகளின் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இருமல், சளி, தொண்டை வலி, சில நேரங்களில் அதீத காய்ச்சலுடன் கூடிய இன்புளுயன்சா வைரஸ் தொற்றுகளால் குழந்தைகள், முதியவர்கள், இணைநோய் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ”எச்1என்1, எச்3என்2 (H1N1 and H3N2) இன்புளுயன்சா வைரஸ் தொற்றுகள் குளிர் மற்றும் மழை காலங்களில் பரவக் கூடியது. கோடைகாலமான மே மாதத்தில் இருக்கும் அதிகமான வெப்ப நிலை, தற்போதைய செப்டம்பர் மாதத்தில் இருந்து வருகிறது. ஆனாலும், இன்புளுயன்சா வைரஸ் தொடர்ந்து தொற்றுகள் பரவி வருகிறது. 4, 5 நாட்கள் கடுமையான இருமல், தொண்டை வலி, உடல் வலியுடன் பலர் வருகின்றனர்.
அவர்களை பரிசோதனை செய்ததில் 10 பேரில் 7 அல்லது 8 பேருக்கு நுரையீரல் சார்ந்த சுவாசப்பாதை தொற்று பாதிப்பு உள்ளது. அந்த பிரச்சனைகள் ஒரே வாரத்தில் சரியாகிவிடுகிறது. சிலருக்கு மட்டும் 2 வாரம் முதல் 6 வாரம் வரை கடுமையான இருமல் பிரச்சனை நீடிக்கிறது. குழந்தைகளுக்கு 103, 104 டிகிரி வரை உடல் வெப்பநிலை (காய்ச்சல்) உள்ளது. நுரையீரல் சார்ந்த தொற்றுகளை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். தொற்று பாதிக்கப்பட்டவர் வீட்டில் இருந்தால் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க அவரை தனிமைப்படுத்த வேண்டும்.
தொற்றுகள் வேகமாக பரவக்கூடியது என்பதால், முகக்கவசம் அணிய வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இன்றி, மாத்திரை, மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. கொரோனா காலத்தில் கடைபிடித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்தனர்.
Read More : குட்நியூஸ்!. தினமும் 3 கப் காபி!. மாரடைப்பு, நீரிழிவு அபாயத்தை குறைக்கலாம்!. ஆய்வில் தகவல்!