இந்தியாவில் இப்படி ஒரு மாநிலமா? ஒரு பைசா கூட வருமான வரி கிடையாதாம்! ஏன் தெரியுமா?
இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட அளவு வருமானம் ஈட்டும் ஒவ்வொருவரும் வரி செலுத்த வேண்டும். மேலும் நாட்டில் உள்ள ஒவ்வொரு வரி செலுத்துபவரும் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்வது கட்டாயமாகும். இருப்பினும், மக்கள் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லாத ஒரு இந்திய மாநிலம் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா..? ஆம்.. சிக்கிம் மாநில மக்கள் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் சுமார் 6.74 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.. சிக்கிம் மாநிலத்தில் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து தற்போது பார்க்கலாம்..
மலைப்பிரதேசமான சிக்கிம், வடக்கு மற்றும் வடகிழக்கில் திபெத், கிழக்கில் பூட்டான், மேற்கில் நேபாளம் மற்றும் தெற்கில் மேற்கு வங்காளம் ஆகியவற்றின் எல்லையாக உள்ளது. பழம்பெரும் ராஜ்ஜியமாக இருந்த சிக்கிம் தனது பழைய சட்டங்கள் மற்றும் சிறப்பு அந்தஸ்துடன் தொடரும் என்ற நிபந்தனையுடன் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இந்திய அரசியலமைபின் 371-வது பிரிவின் கீழ், சிக்கிம் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.. இதன் காரணமாக மாநிலம் சிக்கிம் வருமான வரி கையேடு 1948ஐப் பின்பற்றுகிறது. இந்த வரிக் கையேட்டின் கீழ், சிக்கிம் மாநில மக்கள் மத்திய அரசுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை.
சிக்கிமின் வரிச் சட்டங்கள் 2008ல் ரத்து செய்யப்பட்டன, அங்கு யூனியன் பட்ஜெட் பிரிவு 10 (26AAA) அறிவித்தது, இதில் மாநில மக்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.. மேலும் அம்மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு பான் கார்டும் தேவை இல்லை. சிக்கிம் குடியிருப்பாளர்களுக்கு இந்திய பத்திர சந்தை மற்றும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதற்கு PAN தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது..
சோக்யால் என்ற புத்த மதகுரு-மன்னர் சிக்கிமில் ஆட்சி செய்து வந்தார்.. பின்னர் 1890 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் சமஸ்தானமாக மாறியது. 1947 க்குப் பிறகு, சிக்கிம் இந்தியக் குடியரசுடன் தனது பாதுகாப்பு அந்தஸ்தைத் தொடர்ந்தது. 1973ல், சோக்யாலின் அரண்மனைக்கு முன்னால் அரச எதிர்ப்புக் கலவரம் நடந்தது. பின்னர் 1975ல், மன்னராட்சி மக்களால் அகற்றப்பட்டது. அதே ஆண்டு, சிக்கிம் 22வது மாநிலமாக இந்தியாவுடன் இணைந்தது..
சிக்கிம் மாநிலத்தின் உத்தியோகபூர்வ மொழிகளில் ஆங்கிலம், நேபாளி, சிக்கிமீஸ் மற்றும் லெப்சா ஆகியவை அடங்கும். அம்மாநிலத்தில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன்க குருங், லிம்பு, மாகர், முகியா, நெவாரி, ராய், ஷெர்பா மற்றும் தமாங் ஆகியவை கூடுதல் அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.