சென்னை மக்களே..!! இன்று அதீத கனமழை இருக்காதாம்..!! ஆனால் ஒரு ட்விஸ்ட்..!! பிரதீப் ஜான் சொன்ன முக்கிய தகவல்..!!
சென்னையில் நேற்றிரவு பலத்த மழை கொட்டிய நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு மழைப்பொழிவு இல்லை என்கிறார்கள். அதுமட்டுமின்றி, அதிதீவிர கனமழைக்கான வாய்ப்பு குறையும் என்றும் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைய இருக்கிறது. இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதேபோல, டெல்டா மாவட்டங்களிலும், நாளை ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிக கனமழை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், "வங்கக்கடலில் உள்ள குறைந்த காற்றழுத்தம் இன்னும் தொலைவில் உள்ளது. மழை 10 செ.மீ என்றால் தண்ணீர் தேங்கும். அதுவே 20 செ.மீ தண்ணீர் என்றால் வெள்ளம் வீட்டிற்குள் வரும். அந்த விழிப்புணர்வைத்தான் நான் எல்லோருக்கும் சொல்ல முயற்சிக்கிறேன். மேகங்கள் கொஞ்சமும் பலவீனமடைவதாக நினைக்கவில்லை. அது மேலும் மேலும் குவிந்து அசையாமல் இருப்பதாக தோன்றுகிறது" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் நேற்று பெய்த அதீத கனமழை இன்று இருக்காது என்றும் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேகக் கூட்டங்கள் வடக்கு நோக்கி நகரந்ததால், சென்னையில் பெருமழை இல்லை என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.