'AC-யில் இருப்பவர்கள் தப்பிச்சிட்டீங்க’..!! ’நீங்க அடிக்கடி வெயிலில் சுத்திட்டு இருக்கீங்களா’..? மருத்துவர் எச்சரிக்கை..!!
ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன? கடும் வெயிலில் இருந்து எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து பிரபல மருத்துவர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல அவசர சிகிச்சை மருத்துவர் சந்திரசேகரன், ஒரு பிரபல சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில், ”வெப்பம் அதிகரித்து வருகிறது. ஹீட் ஸ்ட்ரோக்கால் பல பேர் உயிரிழக்கின்றனர். இதில் இருந்து நம்மை பாதுகாக்க சில முக்கியமான டிப்ஸ்களை கட்டாயம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். முதலில் ஹீட் ஸ்ட்ரோக் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதிக வெப்பத்தால் நம்முடைய உடலில் இருந்து வியர்வை வெளியேறும். இந்த வியர்வை நம்முடைய உடலை குளிர வைக்கும். பிறகு அதுவே ஆவியாகிவிடும். இது ஒருவித வெப்ப சமநிலையை நமக்கு உடலில் உருவாக்கும். இது ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து இயற்கையாக நம்மை பாதுகாக்கும் வழிமுறை ஆகும்.
ஆனால், இப்போது மிக மிக அதிகமாக வெப்ப அலை வீசிக் கொண்டிருக்கிறது. உடலில் சுரப்பதற்கு கூட வியர்வை இல்லாத நிலை ஏற்பட்டு விடுகிறது. அதனால்தான், ஹீட் ஸ்ட்ரோக் நம்மை நேரடியாக தாக்குகிறது. ஹீட் ஸ்ட்ரோக் ஒருவரை தாக்கினால் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இல்லையென்றால், அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, மரணம் நேரிடும். அதனால், இந்த வெயில் காலத்தில் கட்டாயம் அனைவரும் கதர் ஆடைகளை, அதுவும் வெண்மை நிறத்தில் அணிய வேண்டும்.
வயது முதிர்ந்தவர்கள், சளி, இருமலுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் வெயிலில் போக வேண்டாம். பொதுமக்கள் யாருமே தேவையில்லாமல் வெளியே போக வேண்டாம். ஒருவேளை தவிர்க்க முடியாமல் வெளியே சென்று, யாருக்காவது திடீரென மயக்கம் வருவதுபோல இருந்தால், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்யலாம். பாதிக்கப்பட்டவரை உடனடியாக நிழலுக்கு கொண்டு வந்து, தண்ணீரை தந்து, உடலில் குளிர்ச்சி தன்மையை கொண்டு வரவேண்டும். மாலை 6 மணிவரை வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். வீட்டிற்குள் வெப்பம் அதிகமாக இருந்தாலும் ஹீட் ஸ்ட்ரோக் வரும். அதனால் காற்றோட்டமுள்ள வீட்டிலேயே இருக்க வேண்டும்.
AC இருந்தால் ரொம்ப நல்லது. ஏசியை ஆஃப் பண்ணவே வேண்டாம். ஏசியிலேயே இருங்கள். ஆனால், திரவ ஆகாரங்களை அதிகமாக உட்கொள்ளுங்கள். தண்ணீர், இளநீர், ஜூஸ் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். உடலை வெயிலில் காட்டாமல் இருப்பதுதான் மிகவும் சிறந்தது" என்கிறார் டாக்டர் சந்திரசேகரன்.
Read More : பிஃஎப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.!! உங்களுக்கு இலவசமா ரூ.50,000 வரப்போகுது..!!