For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க.. திருத்த..!! இன்று சிறப்பு முகாம்..!!

08:06 AM Nov 04, 2023 IST | 1newsnationuser6
மக்களே மிஸ் பண்ணிடாதீங்க     வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க   திருத்த     இன்று சிறப்பு முகாம்
Advertisement

தமிழ்நாடு முழுவதும் உள்ள 68,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

Advertisement

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெறும். இந்நிலையில், கடந்த அக்.27ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, வழக்கமான திருத்தப் பணிகள் அன்றே தொடங்கின. அன்று முதல் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்தல் உள்ளிட்டவற்றுக்கு ஆன்லைனிலும், நேரில் படிவங்கள் அளித்தும் விண்ணப்பிக்கலாம்.

2024 ஜனவரி 1ஆம் தேதி 18 வயது முடியும் வாக்காளர்கள் பெயர் சேர்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பலரும் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கி ஒரு வாரம் நிறைவடைந்துள்ள நிலையில், அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறுகையில், ”கடந்த ஒரு வாரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் தொடர்பாக 36,142 விண்ணப்பங்கள் வந்துள்ளன. குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் நிறைய பேர் விண்ணப்பித்துள்ளனர்” என்றார்.

இந்நிலையில், நவ.4, 5 (இன்று, நாளை) ஆகிய இரண்டு நாட்களும் தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 68,000-க்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம், திருத்தம் செய்தலுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அங்கு வாக்காளர் பட்டியலும் வைக்கப்பட்டிருக்கும். பொதுமக்கள் தங்கள் பெயர் அதில் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். ஒருவேளை, பெயர் நீக்கப்பட்டிருந்தால், சேர்ப்பதற்கு விண்ணப்பம் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement