மக்களே உஷார்!. இந்த 90 மருந்துகள் தரமற்றவை!. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அதிர்ச்சி ரிப்போர்ட்!
Medicines Fails: கடந்த அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் மொத்தம் 34 இடங்களில் பரிசோதிக்கப்பட்ட 90 மருந்துகள் தரமற்றவை என்று மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அதிர்ச்சி ரிப்போர்ட் வழங்கியுள்ளது.
போலி மருந்துகளை அடையாளம் காண ஒவ்வொரு மாதமும் மருந்துகளின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. ஆய்வகத்தில் சோதனை செய்யப்படும் மருந்துகள் தரம் தொடர்பான அறிக்கை வெளியிடப்படுகிறது. அந்தவகையில், மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, அக்டோபர் மாதத்திற்கான (NSQ) பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில், நாடுமுழுவதும் மத்திய மருந்து ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட 56 மருந்து மாதிரிகள் தரமான தரம் இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், அக்டோபரில் பீகார் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தால் எடுக்கப்பட்ட மூன்று மருந்து மாதிரிகள் போலியானவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
அதில், ஹிமாச்சலில் தயாரிக்கப்பட்ட 14 மருந்துகள் தரத்தை எட்டவில்லை. அவற்றில், டாக்சின் மருந்து செப்கெம், செஃபோப்ராக்ஸ், சிஎம்ஜி பயோடெக் நிறுவனத்தின் பீட்டா ஹிஸ்டைன், எல்விஸ் பார்மாவின் சிறுநீர் தொற்று மருந்து அல்சிப்ரோ ஆகியவையும் தரமானதாக இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவை அங்கீகரிக்கப்படாத மற்றும் அறியப்படாத உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்பட்டன என்றும் மற்றொரு நிறுவனத்திற்கு சொந்தமான பிராண்ட் பெயரைப் பயன்படுத்தி இந்த மருந்துகள் தயாரிக்கப்பட்டதாகவும், "இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. அதாவது, அக்டோபரில் பரிசோதிக்கப்பட்ட 90 மருந்து மாதிரிகள் தரமானதாக இல்லை. , மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்களால் பரிசோதிக்கப்பட்ட 34 மருந்து மாதிரிகளும் NSQ என அடையாளம் காணப்பட்டுள்ளன.
CDSCO சார்பாக தோல்வியடைந்த மருந்துகளின் மாதிரிகளில் இரத்த சோகை மருந்து இரும்பு சுக்ரோஸ், அழற்சி மருந்து மெத்தசோன், வாந்தி மருந்து ரபேபிரசோல் மற்றும் ஆண்டிபயாடிக் மருந்து என்போபோக்சசின் ஆகியவை அடங்கும்.