உடல்பருமனால் 18 வகையான புற்றுநோய்கள் உண்டாகும்..!! ஆய்வு முடிவில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!
இன்றைய நவீன காலத்திற்கேற்ப உணவு முறை பழக்கங்கள் மற்றும் தொழில் சார்ந்தவைகளால் நமது உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடல் பருமனாக இருப்பவர்களுக்கு நீரழிவு மற்றும் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
எனினும், சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு மூலமாக உடல் பருமனானது பல வகையான புற்றுநோய்களை ஏற்படுத்தும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த தீவிர ஆராய்ச்சி இன்னும் தேவை என்றாலும் கூட உடல் பருமன் நமது உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு விதமான மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
உடல் பருமன் அல்லது கொழுப்பு காரணமாக புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது? அடிபோஸ் திசு எனப்படும் கொழுப்பு செல்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சிக்கு பங்களிக்க கூடிய ஹார்மோன்கள் மற்றும் கெமிக்கல் மீடியேட்டர்களை உற்பத்தி செய்கிறது. உடல் பருமன் என்பது உயிரியல் செயல்முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலமாக புற்றுநோயை உருவாக்குகிறது.
அடிபோஸ் திசு அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை உற்பத்தி செய்வதன் காரணமாக எண்டோமெட்ரியல், கருப்பை மற்றும் பிற புற்றுநோய்கள் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அதிக ஈஸ்ட்ரோஜன் அளவுகள் காரணமாக மார்பகப் புற்றுநோயும் ஏற்படலாம். இன்சுலின் எதிர்ப்பு புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கிறது : அதிக BMI கொண்டவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு திறன் அதிகமாக இருக்கும். இதனால் ஹைப்பர்இன்சுலினிமியா (Hyperinsulinemia) என்ற அதிக இன்சுலின் உற்பத்தி தூண்டப்படுகிறது.
காலப்போக்கில் இது கோலான், ரீனல், ப்ரோஸ்டேட் மற்றும் என்டோமெட்ரியல் புற்று நோய்களை உண்டாக்குகிறது. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு அசாதாரணமான சைட்டோகின் அளவுகள் காணப்படும். இது நாள்பட்ட வீக்க நோய்களான பித்தப்பை கற்கள் மற்றும் நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் நோயை ஏற்படுத்தும். இதனால் செல்லுலார் DNA சேதமடைவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இறுதியில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.
அதிக உடல் எடையுடன் தொடர்புடைய புற்றுநோய் வகைகள் என்னென்ன? : உடல் பருமன் காரணமாக மார்பக புற்றுநோய், பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய், கணைய புற்றுநோய், கருப்பை புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான புற்றுநோய்கள் உண்டாகலாம். மேலும் ஈஸ்ட்ரோஜன் காரணமாக என்டோமெட்ரியத்தின் வளர்ச்சியை தூண்டப்பட்டு இதனால் என்டோமெட்ரியல் புற்று நோய்களும் அதிகரிக்கலாம்.
உடல்பருமன் காரணமாக ஏற்படக்கூடிய புற்று நோய்களை ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை மூலமாக நம்மால் தடுக்க முடியும் கொள்ள வேண்டும். உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைப்பது, கொழுப்பு மற்றும் குப்பை உணவுகளை தவிர்ப்பது, சுறுசுறுப்பாக இருப்பது, அன்றாட உடற்பயிற்சி செய்வது போன்றவை உடல் எடை அதிகரிப்பதை தடுக்க உதவும் ஒரு சில வழிகள் ஆகும்.
Read More : ”தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு தனி பட்ஜெட்”..!! அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்..!!