ரேஷன் கார்டு இருக்குதா? ஜனவரி முதல் அடிக்கப்போகுது ஜாக்பாட்..!! மகளிர் உரிமை தொகையில் லேட்டஸ் அப்டேட் இதோ..
தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டைகள் வைத்திருக்கும் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் வகையில் கூடுதல் பயனர்களை இணைப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்ய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மகளிர் உரிமைத்துறை திட்டத்தில் சுமார் ஒரு கோடி 16 லட்சம் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் வருமான வரி செலுத்துவோர், ஏற்கனவே பிற உதவித் தொகைகள் பெறுபவர்கள் உள்ளிட்ட சிலருக்கு வழங்கவில்லை. முதலில் ஒரு கோடியே 6 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு கோடியே 16 லட்சம் பயனாளர்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் புதிதாக திருமணம் முடிந்தவர்கள், புதிய குடும்ப அட்டை பெற்றவர்கள் உள்ளிட்டோருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என கூறப்பட்டது. நிச்சயம் அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு துணை முதலமைச்சரும், சிறப்பு திட்ட செயலாக்குத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.
மேலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பான ஆய்வு கூட்டங்களை எத்தனை மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்து வந்தார். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது மகளிர் உரிமை தொகை திட்டத்தில் கூடுதலாக பயனாளிகளை இணைக்க முதலமைச்சர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக,"கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலனுக்கான திட்டங்களில் பயனாளிகளின் எண்ணிக்கையையும், பயனாளிகளிடம் அவை முறையாகச் சென்று சேர்வதையும் உறுதிப்படுத்திக் கொண்டு, கூடுதல் விண்ணப்பங்கள் மற்றும் மக்களின் பிற தேவைகளைக் கவனித்து, தகுதியுடையவற்றை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தினேன்" என திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடித்தத்திலும் முதல்வர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அருப்புக்கோட்டையில் பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ரேசன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும், மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் எனக் கூறியிருக்கிறார். இதன் காரணமாக மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்கப்படும் அல்லது கூடுதல் பயனாளிகள் இணைக்கப்படுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more ; முன்பு போல் எந்த வேலையும் செய்ய முடியவில்லையா? நுரையீரலுக்கு கவனம் தேவை..! – மருத்துவர்கள் எச்சரிக்கை