மக்களே உஷார்..!! நீங்களும் இந்த மாதிரி சிக்கிடாதீங்க..!! மொத்த பணமும் காணாமல் போய்விடும்..!!
மதுரை மாநகர் திருநகரை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர், கடந்த மார்ச் மாதம் KreditBee Loan App என்ற ஆன்லைன் கடன் செயலி மூலம் ரூ.20,000 கடன் வாங்கியுள்ளார். அதனை மாதாந்திர அடிப்படையில் லோனை முழுவதுமாக கட்டி முடித்துள்ளார். கடந்த 29ஆம் தேதி அந்த பெண்ணுக்கு வாட்ஸ் அப் எண்ணிற்கு லோன் வேண்டுமா? என்று BALSAM Credit ஆப் என்ற பெயரில் லிங்க் ஒன்று வந்துள்ளது. அதை கிளிக் செய்துவிட்டு பின்னர், டெலிட் செய்துள்ளார்.
சில நிமிடங்களில் இளம்பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணிற்கு BALSAM Credit என்ற பெயரில் இருந்து ரூ.3,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக ஒரு மெசேஜ் வந்துள்ளது. இதையடுத்து, அந்த பெண் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று, விவரங்களை கேட்டபோது 3,000 ரூபாய் வரவு வைக்கவில்லை என தெரியவந்துள்ளது. இந்நிலையில், மீண்டும் அந்த வாட்ஸ் அப் எண்ணில் இருந்து உங்கள் வங்கிக் கணக்கிற்கு ரூ.3,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
உங்கள் கடனை நீங்கள் திருப்பி செலுத்த வேண்டும் என குறுந்தகவல் வந்துள்ளது. மேலும், அந்த எண்ணில் இருந்து மர்ம நபர் தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதற்கு அந்த பெண்மணி எனக்கு லோன் வரவே இல்லை.? நான் ஏன் தர வேண்டும் என பதிலளித்துள்ளார். ஆனால், ரூ.3,000 பணத்தை உடனே திருப்பி அனுப்பாவிட்டால், உன் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாச படமாக மாற்றி அதனை குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கு அனுப்பிவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
மேலும் தொடர்ச்சியாக, அந்த பெண்ணின் உறவினர் ஒருவருக்கு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அனுப்பி எச்சரித்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், செய்வதறியாது பதற்றத்தில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து அதற்கான முயற்சியும் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து, உறவினர்கள் அவரை காப்பாற்றி, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு நாள்தோறும் இதுபோன்று மொபைல் லோன் ஆஃப் மூலமாக 2 ஆயிரம், 3 ஆயிரம் என குறைந்த தொகையை கடன் வாங்கிவிட்டு இது போன்று மோசடி கும்பல்களில் சிக்கி தவிக்கும் நபர்கள் ஏராளமானவர்களின் புகார்கள் வந்து கொண்டே இருப்பதாகவும், இது போன்ற போலியான கடன் செயலிகளை யாரும் பயன்படுத்த வேண்டாம் எனவும் போலீஸ் தரப்பு எச்சரித்துள்ளது.
Read More : தமிழக மக்களே..!! மின்சார வாரியத்தின் இந்த அறிவிப்புகளை கவனிச்சீங்களா..? அனைவரது வீட்டிலும் இது முக்கியம்..!!