மக்களே உஷார்..!! இந்த நம்பரில் இருந்து ஃபோன் வந்தா எடுக்காதீங்க..!! மத்திய அரசு திடீர் எச்சரிக்கை..!!
ஆன்லைன் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், சமீப காலமாக ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருவதை நம்மால் கண்கூட பார்க்க முடிகிறது. விதவிதமாக மோசடி செய்யும் யுத்திகளை கையாண்டு, பல முறைகளில் மக்களிடம் இருந்து நூதனமாக பணத்தை திருடுகிறார்கள்.
அந்தவகையில், தொலைத் தொடர்பு துறையில் இருந்து பேசுவதாக கூறி, ஆள் மாறாட்டம் செய்து வரும் மோசடி அழைப்புகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு தொலைத்தொடர்பு துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சைபர் குற்றவாளிகள் இத்தகைய அழைப்புகள் மூலம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது போன்ற அழைப்புகள் மற்றும் முறைகேடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருந்தால், சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.