7 நகரங்களில் வீடுகளின் விலை ஜெட் வேகத்தில் உயர்வு…! அதுவும் இத்தனை கோடியா? சென்னையும் லிஸ்ட்ல இருக்கு..
சென்னை உள்ளிட்ட 7 முக்கிய நகரங்களில் வீடுகளின் விலை சராசரியாக 23 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது என்று ஆய்வு தெரிவித்துள்ளது.
சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புனே உள்ளிட்ட 7 நகரங்களில், நடப்பு நிதியாண்டு முதல் ஆறு மாதங்களில் சராசரியாக 1.23 கோடிக்கு வீடுகள் விற்பனையாகியுள்ளது. கடந்த் நிதியாண்டில் இதே ஆறு மாத காலகட்டத்தில் சராசரியாக 1 கோடி ரூபாய்க்கு வீடுகள் விற்பனையாகியிருந்தது.
இந்த 7 நகரங்களில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் உள்ளிட்ட ஆறு மாதங்களில் 2,27,400 வீடுகள் ரூ.2,79,309 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. மேலும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2,35,200 வீடுகள் ரூ.2,35,200 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் வீடுகளின் விலை 56 விழுக்காடு அளவுக்கு உயர்ந்துள்ளது. முன்னதாக 93 லட்சத்திற்கு விற்கப்பட்ட வீடுகளின் விலை தற்போது 1.45 கோடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் வீடுகளின் விலை 44 விழுக்காடு அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 84 லட்சத்திற்கு விற்கப்பட்ட வீடுகளின் விலை நடப்பாண்டில் முதல் ஆறு மாதங்களில் 1.21 கோடியாக உயர்ந்துள்ளது.
தெலுங்கானா தலைநகரான ஹைதராபாத்தில் வீடுகளின் விலை 37 விழுக்காடு அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 84 லட்சத்திற்கு விற்கப்பட்ட வீடுகளின் விலை நடப்பாண்டில் முதல் ஆறு மாதங்களில் 1.15 கோடியாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் வீடுகளின் விலை 31 விழுக்காடு அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 72 லட்சத்திற்கு விற்கப்பட்ட வீடுகளின் விலை நடப்பாண்டில் முதல் ஆறு மாதங்களில் 95 லட்சமாக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் வீடுகளின் விலை 29 விழுக்காடு அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 66 லட்சத்திற்கு விற்கப்பட்ட வீடுகளின் விலை நடப்பாண்டில் முதல் ஆறு மாதங்களில் 85 லட்சமாக உயர்ந்துள்ளது.
மேற்கு வாங்க மாநிலத்தின் தலைநகரமான கொல்கத்தாவில் வீடுகளின் விலை 16 விழுக்காடு அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 53 லட்சத்திற்கு விற்கப்பட்ட வீடுகளின் விலை நடப்பாண்டில் முதல் ஆறு மாதங்களில் 61 லட்சமாக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பையில் வீடுகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டு 1.47 கோடிக்கு விற்கப்பட்ட வீடுகளின் விலை நடப்பாண்டில் முதல் ஆறு மாதங்களில் அதே 1.47 கோடிக்கு விற்பனையாகி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய மெட்ரோ நகரங்களில் வீடுகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், நடுத்தர வர்க்கத்தினரின் வீடு வாங்கும் கனவு கேள்விக்குறியாகியுள்ளது.
Read More: வெயிட் லாஸ் முதல் இதய ஆரோக்கியம் வரை.. கிச்சனில் இருக்கும் இந்த ஒரு பொருளில் இவ்வளவு நன்மைகளா..?