For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'மாட்டின் சிறுநீரில் குளித்து, சாணத்தை சன் ஸ்க்ரீமாக பயன்படுத்தும் மக்கள்!!' எங்க இருக்காங்க தெரியுமா?

07:06 PM May 29, 2024 IST | Mari Thangam
 மாட்டின் சிறுநீரில் குளித்து  சாணத்தை சன் ஸ்க்ரீமாக பயன்படுத்தும் மக்கள்    எங்க இருக்காங்க தெரியுமா
Advertisement

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள தெற்கு சூடான் நாட்டில் பசுக்களின் சிறுநீரை குளிப்பதற்காகவும் சாணத்தை பூசிக்கொள்வதற்காகவும் பயன்படுத்துகின்றனர்.

Advertisement

ஆப்பிரிக்கா மகண்டத்தில் உள்ள தெற்கு சூடான் நாட்டில் பசுக்களின் சிறுநீரை அங்கு வாழும் பழங்குடியின மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். அத்துடன் பசுக்கள் வெளியேற்றும் சாணத்தை அவர்கள் சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் சன் ஸ்கிரீமாக பயன்படுத்துகின்றனர்.  மாடுகளின் சிறுநீர் குளிப்பதற்கு மட்டுமின்றி வீடுகளில் தெளிப்பதற்கும், பல் துலக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த விசித்திர மக்கள் தறபோதும் வாழ்ந்து வருகின்றனர்.

தெற்கு சூடான் நாட்டில் அன்கோல் வதுசி என்ற இனத்தைச் சேர்ந்த மாடுகள் 8 அடி உயரம் வரை வளரக்கூடியவை. இவை 500 அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 41,000 விலை மதிப்பு உடையவை. இந்த வகை மாடுகள் முண்டாரி எனப்படும் பழங்குடியின மக்களிடம் அதிகம் உள்ளது. அப்பகுதியில், திருமணங்களின் போது வரதட்சணை பொருளாக இந்த அன்கோல் வதுசி இன மாடுகள் வழங்கப்படுகின்றன.

பசுக்களின் சிறுநீரில் உள்ள அம்மோனியா பழங்குடியின மக்களின் தலை முடியை ஆரஞ்சு நிறமாக மாற்றியுள்ளது. முண்டாரி பழங்குடி மக்கள் பயன்படுத்தும் அன்கோல் வதுசி என்ற மாடுகள் இறைச்சிக்காக மிகக் குறைந்த எண்ணிக்கையில் கொல்லப்படுகின்றன. இதற்கு அதன் விலை அதிகமாக இருப்பது முக்கிய காரணமாகும்.

Read More ; டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம் : நெதர்லாந்திடம் வீழ்ந்தது இலங்கை!

Tags :
Advertisement