மக்களே உஷார்..!! மீண்டும் அச்சுறுத்தும் புதிய வைரஸ்..!! குழந்தைகளை தான் அதிகம் பாதிக்குதாம்..!! சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பிறகு பல புதிய வைரஸ் தாக்கங்களினால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவில் கடந்த சில நாட்களாக ‘சன்டிபுரா’ வைரஸ் (Chandipura Virus) தொற்றால் சுமார் 15 சிறுவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட 14 சிறுவர்கள் ‘சன்டிபுரா’ வைரஸ் தொற்றால் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு குழந்தை உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. உயிரைக் கொல்லும் இந்த கொடிய வைரஸுக்கு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் தான், அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதார, தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ”குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் குழந்தைகள் இடையே சன்டிபுரா எனும் வைரஸ் பரவுவதாகவும், இது அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது. கொசு, ஒருவகை சிறிய வண்டு மூலம் இது பரவக்கூடியது. இது பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.