For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மீண்டும் ஆரோக்கிய உணவை நாடும் மக்கள்..!! 2024இல் அதிகம் சாப்பிட்ட உணவுகளின் பட்டியல் இதோ..!!

As this year (2024) comes to an end, a list of the most popular healthy foods has been released.
02:41 PM Dec 10, 2024 IST | Chella
மீண்டும் ஆரோக்கிய உணவை நாடும் மக்கள்     2024இல் அதிகம் சாப்பிட்ட உணவுகளின் பட்டியல் இதோ
Advertisement

இந்தாண்டு (2024) முடிவடையவுள்ள நிலையில், மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடப்பட்ட ஆரோக்கிய உணவுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

Advertisement

பல ஆண்டுகளுக்கு முன் நமது முன்னோர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தனர். இதனால், அவர்களும் ஆரோக்கியமாக வாழ்ந்து நோயின்றி இறந்தார்கள். ஆனால், இடையில் சில காலம் ஆரோக்கியமற்ற உணவுகள் சுவையாக இருக்கிறது என்று மக்கள் அதிகம் சாப்பிட ஆரம்பித்தார்கள். அந்த சமயத்தில் இளம் வயதிலேயே நோய்வாய்பட்டு இறந்தனர்.

ஆனால், இந்தாண்டு மீண்டும் மக்கள் ஆரோக்கியமான உணவுகளையே எடுக்க ஆரம்பித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. ஆம்..!! இந்தாண்டு அதிகம் சாப்பிடப்பட்ட உணவுகளில் பாதாம் பருப்பு முதலிடத்தில் இருக்கிறது. இதில், ஏராளமான நன்மைகள் கொட்டிக் கிடப்பதால், மக்கள் இதனை விரும்பி அன்றாடம் சாப்பிடுவது தெரியவந்துள்ளது.

அடுத்ததாக முந்திரி உள்ளது. முந்திரியில் புரதச்சத்து, நல்ல கொழுப்பு, தாது உப்புகள் மேலும் உடல் எடையை கட்டுப்படுத்த உதவும் பொருட்கள் ஆகியவை உள்ளன. இதனால், பலர் முந்திரியை எடுத்துக் கொண்டுள்ளனர். இதனையடுத்து நார்ச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின்கள் அதிகம் இருக்கும் துவரை, உளுந்து, பாசிப்பயறு போன்ற பருப்பு வகைகளை மக்கள் அதிகம் சாப்பிட்டுள்ளனர். சைவ உணவுகளில் புரதச்சத்து அதிகம் உள்ள உணவு வகையாக பருப்பு வகைகள் உள்ளன.

பக்வீட் அடுத்த இடத்தில் உள்ளது. இந்த குட்டி தானியம் இந்தாண்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதில், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகம் உள்ளன. கோதுமை மாவுக்கு ஒரு சிறந்த மாற்றாக விளங்குகிறது. மேலும், பருப்பு வகைகள், விதைகள் மற்றும் காய்கறிகள் ஆகியவையும், இறைச்சி மற்றும் பால் போன்றவையும் மக்களால் அதிகம் சாப்பிடப்பட்டுள்ளன. அதேபோல் கேழ்வரகு, சாமை, கம்பு ஆகியவையும் ஆரோக்கிய உணவு பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

பானங்களில் கொம்புச்சா, க்ரீன் டீ, மூலிகை பானங்கள் போன்றவை மீண்டும் அதிகம் பருகப்படுகின்றன. அதேபோல் உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களை வாங்கி மக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

Read More : செம குட் நியூஸ்..!! டிசம்பர் 13ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

Tags :
Advertisement