மக்களே அலெர்ட்..!! வானிலை ஆய்வு மையம் சொன்ன தேதி இன்னைக்கு தான்..!! பெருசா சம்பவம் இருக்கு..!!
இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளிலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 30ஆம் தேதி வரை சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளது கடலுக்கு சென்ற மீனவர்கள் 28ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.