முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நாடு முழுவதும் 500 இடங்களில்...! ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு நவம்பர் 30-ம் தேதி வரை...!

08:57 AM Nov 15, 2023 IST | 1newsnationuser2
Advertisement

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் 'வாழ்க்கையை எளிதாக்கும் வகையில்' ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத் துறை மின்னணு ஆயுட்கால சான்றிதழ் முறையை (டி.எல்.சி) ஊக்குவித்து வருகிறது. 2014 ஆம் ஆண்டில், பயோமெட்ரிக் கருவிகளைப் பயன்படுத்தி டி.எல்.சி.களை சமர்ப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆதார் தரவுத்தளத்தை அடிப்படையாகக் கொண்ட முக அங்கீகார தொழில்நுட்ப அமைப்பை உருவாக்கியுள்ளது.

Advertisement

இதன் மூலம் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான எந்த திறனறி செல்பேசியிலிருந்தும் எல்.சி.யை சமர்ப்பிக்க முடியும். இந்த வசதியின்படி, முக அங்கீகார நுட்பம் மூலம் ஒரு நபரின் அடையாளம் நிறுவப்பட்டு டி.எல்.சி உருவாக்கப்படுகிறது. நவம்பர் 2021-ல் தொடங்கப்பட்ட இந்த சிறப்பான தொழில்நுட்பம், ஓய்வூதியதாரர்கள் வெளிப்புற பயோ-மெட்ரிக் சாதனங்களை சார்ந்திருப்பதைக் குறைத்தது மற்றும் திறனறி செல்பேசி, அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த செயல்முறையை மக்களுக்கு மிகவும் அணுகக்கூடியதாகவும் குறைவான செலவுடையதாகவும் ஆக்கியது.

17 ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், அமைச்சகங்கள்/ துறைகள், ஓய்வூதியர் நலச் சங்கங்களுடன் இணைந்து 50 இலட்சம் ஓய்வூதியதாரர்களை இலக்காகக் கொண்டு 2023 நவம்பர் 30 வரை நாடு தழுவிய இயக்கம் 100 நகரங்களில் 500 இடங்களில் நடத்தப்படுகிறது.

Advertisement
Next Article