தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வரும் தங்கம் விலை! 5 நாட்களில் ரூ.2320 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்..
சென்னையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,800க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 28ஆம் தேதி ஒரு பவுன் ரூ.50,000 என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. இதைத் தொடர்ந்து மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6% ஆக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) இறுதி வரை உயர்ந்து வந்த நிலையில், இம்மாதம் தொடக்கத்தில் இருந்து அதன் விலை குறைந்துக் கொண்டே வந்தது. கடந்த 1ஆம் தேதி ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 385-க்கும், ஒரு சவரன் ரூ.59,080-க்கும் விற்பனை ஆனது. பின்னர், விலை குறைந்து கொண்டே வந்து, கடந்த 17ஆம் தேதி ஒரு கிராம் ரூ.6,935-க்கும், ஒரு சவரன் ரூ.55,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதேபோல் இன்றும் தங்கத்தின் மீதான விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
நேற்றைய தினம் சென்னையில் ஒரு கிராம் ரூ.7,145-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,225க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,800-க்கு விற்பனையாகிறது. மேலும் தங்கத்தின் விலை கடந்த 5 நாட்களில் ஒரு சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்களும் பொதுமக்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளி விலையை பொறுத்தவரை மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Read More: IPL 2025 : ஐபிஎல் தொடங்கும் தேதி அறிவிப்பு..!! – ரசிகர்கள் உற்சாகம்