For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'PAYTM' வங்கி 'UPI' சேவை தொடருமா.? நிறுவனத்தின் ஆச்சரியமான பதில் .!

11:19 AM Feb 06, 2024 IST | 1newsnationuser4
 paytm  வங்கி  upi  சேவை தொடருமா   நிறுவனத்தின் ஆச்சரியமான பதில்
Advertisement

பேடிஎம் நிறுவனத்தின் யூபிஐ சேவை வழக்கம் போல் செயல்படும் என அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. அந்த நிறுவனம் மற்ற வங்கிகளுடன் இணைந்து மாற்றங்களை செய்து வருவதால் யுபிஐ சேவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது. பேடிஎம் நிறுவனத்தின் யுபிஐ சேவை, பேடிஎம் பேமெண்ட் பேங்க் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தைபிப்ரவரி 29க்குப் பிறகு வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதை இந்திய ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது..

Advertisement

பேடிஎம் நிறுவனத்தின் யுபிஐ சேவை குறித்து பேசிய அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் "பேடிஎம் வாடிக்கையாளர்கள் தங்களது யுபிஐ சேவையை தொடரலாம் . வாடிக்கையாளர்களின் யுபிஐ சேவை தடையில்லாமல் தொடர்ந்து இயங்குவதற்கு மற்ற வங்கிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் கூடுதலாக எதுவும் செய்யத் தேவையில்லை என்று பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் அறிக்கையின்படி பேடிஎம் பேங்க் லிமிடெட் டிசம்பர் மாதத்தில் யுபிஐ சேவையை வழங்கும் நிறுவனமாக இருந்தது. அந்த மாதத்தில் ₹283.5 கோடி பரிவர்த்தனைகளைப் பெற்றது. பேடிஎம் பேமென்ட் வங்கி செயலி வழியாக டிசம்பர் மாதத்தில் ₹16,569.49 கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் மேற்கொண்டுள்ளனர். மேலும் ₹144.25 கோடி பரிவர்த்தனை நடந்திருக்கிறது என தெரிவித்துள்ளது.

பாரத் பில் பேமெண்ட் ஆப்பரேட்டிங் யூனிட் மூலம் பில் செலுத்துவதில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா நடவடிக்கையின் தாக்கம் தொடர்பாக பேசிய பேடிஎம் செய்தி தொடர்பாளர், "வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் தங்களது பேடிஎம் யுபிஐ சேவையை பயன்படுத்தி, எப்போதும் போல் அனைத்து பில் பேமெண்ட்கள் மற்றும் ரீசார்ஜ்களுக்கும் பயன்பாட்டைத் தொடரலாம்", என தெரிவித்திருக்கிறார். மேலும் பேடிஎம் நிறுவனம் வழக்கம் போல் வாடிக்கையாளர்களுக்கு வசதியான கட்டணங்களுடன் சேவையை தொடர ஆதரவளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 29க்குப் பிறகு வாடிக்கையாளர் கணக்குகள், வாலட்கள், 'FASTags' மற்றும் பிற கருவிகளில் டெபாசிட் அல்லது டாப்-அப்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்துமாறு பேடிஎம் வங்கிக்கு ரிசர்வ் பேங்க் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் 'Paytm Wallet' பயனர்கள் பிப்ரவரி 29 வரை பரிவர்த்தனைகளைத் தொடரலாம், ஆனால் அதன் பிறகு அவர்கள் ஏற்கனவே உள்ள இருப்பு தீர்ந்து போகும் வரை பயன்படுத்த முடியும், ஆனால் அவர்களின் கணக்கில் பணத்தைச் டெபாசிட் செய்ய முடியாது.

Tags :
Advertisement