ஒரே நேரத்தில் 1000 பேருக்கு வேலை போச்சு.. Paytm நிறுவனத்தில் என்ன நடக்கிறது?
Paytm நிறுவனம் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை 15 முதல் 20 வரை குறைக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் முன்னணி பின்டெக் சேவை நிறுவனமான பேடிஎம்-இன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் இந்த நிதியாண்டில் தனது பணியாளர் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக, தற்போதைய பணியாளர் எண்ணிக்கையில் 15 முதல் 20 சதவீதம் வரை குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
பேடிஎம் நிறுவனத்தில் அதிகரித்து வரும் இழப்புகளைச் சமாளிக்க, 5,000 முதல் 6,300 ஊழியர்களைக் குறைப்பதன் மூலம் வருடத்திற்கு ரூ.400-500 கோடி வரை சேமிக்க ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் இலக்கு வைத்துள்ளது. 2023 நிதியாண்டில், நிறுவனத்தின் சராசரி பணியாளர் எண்ணிக்கை 32,798 ஆக இருந்தது. இதில், 29,503 பேர் ஆக்டிவ் ஆக பணியாற்றியவர்கள், மேலும் ஒரு ஊழியருக்குச் சராசரி செலவு ரூ.7.87 லட்சமாக இருந்தது. 2024 நிதியாண்டில், மொத்த பணியாளர் செலவு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 34% அதிகரித்து ரூ.3,124 கோடியாக உயர்ந்தது.
இதன் காரணமாக, ஒரு பணியாளருக்கான சராசரி செலவு ரூ.10.6 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் செலவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படும் வேளையில், செலவுகளை விரைவாகக் குறைப்பதற்கு டிசம்பர் மாதம் 1,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
சவுக்கு சங்கர் வழக்கில் திடீர் திருப்பம்..!! நீதிபதிகள் இடையே மாறுபட்ட கருத்து..!!