இனி சூப்பர் தான்.! பாஸ்போர்ட்வாங்குறது ரொம்ப ஈசி.! சென்னையை சுற்றி 4 இடங்களில் தட்கல் பாஸ்போர்ட் அறிமுகம்.!
ஒரு நாட்டின் குடிமகன் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு பாஸ்போர்ட் அவசியமான ஒரு ஆவணம் ஆகும். மேலும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படச் சான்றுகளிலும் பாஸ்போர்ட் முக்கிய ஆவணமாக இருக்கிறது. ஒருவருக்கு பாஸ்போர்ட் தேவை என்றால் அவர் பாஸ்போர்ட் அலுவலகங்களில் விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம். பாஸ்போர்ட் விண்ணப்பித்த தேதியிலிருந்து 30 முதல் 45 நாட்களுக்குள் நமது முகவரியில் நேரடியாக கிடைத்து விடும்.
ரயில்வேக்கு தட்கல் டிக்கெட் இருப்பதைப் போலவே பாஸ்போர்ட் எடுப்பதற்கும் தட்கல் முறை இருக்கிறது. தட்கல் முறையில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது 1 முதல் 3 நாட்களில் இருந்து 14 நாட்களுக்குள் கிடைத்துவிடும். இந்த முறையானது வருகின்ற ஜனவரி 1-ம் தேதியிலிருந்து தாம்பரம் சாலிகிராமம் அமைந்தகரை மற்றும் பாண்டிச்சேரி பாஸ்போர்ட் அலுவலகங்களில் நடைமுறைக்கு வர இருப்பதாக பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அறிக்கையை வெளியிட்டிருக்கும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் சென்னை பாஸ்போர்ட் அலுவலக வரலாற்றிலேயே 2023 ஆம் ஆண்டு 5 லட்சம் பாஸ்போர்ட் வழங்கி சாதனை படைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன்பாக நடத்தப்படும் காவல்துறையினரின் சோதனை 8 முதல் 10 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளப்பட்டது. தற்போது இந்த வெரிஃபிகேஷன் 3 முதல் 4 நாட்களில் முடிந்து விடுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் தட்கல் பாஸ்போர்ட் சேவைகள் சாலிகிராமம் அமைந்தகரை மற்றும் தாம்பரம் பாஸ்போர்ட் அலுவலகங்களில் ஜனவரி 1-ம் தேதி முதல் செயல்படுத்த இருப்பதை தெரிவித்த அவர் புதுச்சேரியிலும் இந்த முறை ஜனவரி 1-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தவர்கள் 14 நாட்களுக்குள் தங்களது பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார் .