For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பயணிகள் அதிர்ச்சி..!! ஆட்டோ கட்டணம் அதிரடி உயர்வு..!! இனி குறைந்தபட்சமே ரூ.50..!! பிப்.1 முதல் அமல்..!!

Auto drivers have announced that they will charge a minimum fare of Rs. 50 from the 1st.
08:20 AM Jan 11, 2025 IST | Chella
பயணிகள் அதிர்ச்சி     ஆட்டோ கட்டணம் அதிரடி உயர்வு     இனி குறைந்தபட்சமே ரூ 50     பிப் 1 முதல் அமல்
Advertisement

வரும் 1ஆம் தேதியில் இருந்து குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.

Advertisement

கடந்த 2013ஆம் ஆண்டு ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை தமிழ்நாடு அரசு மாற்றி அமைத்தது. பின்னர், தனிநபர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய தமிழ்நாடு அரசு, 2 ஆண்டுகளைக் கடந்த பிறகும் கட்டணத்தை உயர்த்தவில்லை.

அதாவது, சுமார் 12 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளது. இது தொடர்பாக மார்ச் மாதம் ஆட்டோ ஓட்டுநர்களுடன் போக்குவரத்துத்துறை ஆலோசனை நடத்தி, கட்டணம் தொடர்பான பரிந்துரைகளையும் பெற்றது. ஆனால், கட்டணம் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் தான், ஆட்டோவுக்கான கட்டணத்தை ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டி.ஏ.ஜாஹீர் ஹுசைன் கூறுகையில், ”கடந்த 12 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஓட்டுநர்கள் சார்பில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி, முதல் 1.8 கி.மீ-க்கு ரூ.50, கூடுதல் கிமீ-க்கு ரூ.18, காத்திருப்பு கட்டணம் ரூ.1.5 என்ற வகையில் வசூலிக்கப்படும். இந்த கட்டணத்தின்படியே தற்போது கிளாம்பாக்கத்தில் இருந்து ப்ரீபெய்டு ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த கட்டணத்தை உரிமைக்குரல் உள்ளிட்ட கூட்டமைப்பு சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பின்பற்றுவார்கள்” என்று தெரிவித்துள்ளனர்.

Read More : ”மத்திய அரசு இதை மட்டும் செய்துவிட்டால் தங்கம் விலை மேலும் உயரும்”..!! ஆனந்த் சீனிவாசன் எச்சரிக்கை..!!

Tags :
Advertisement