வந்தே பாரத் ரயில் உணவில் 'கரப்பான்பூச்சி' - அதிர்ச்சி அடைந்த பயணி!! வைரலாகும் போட்டோஸ்!!
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே வந்தே பாரத் விரைவு ரயில்களில் பயணிகள் சார்பில் ஏராளமான புகார்கள் எழுந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பயணிகளுக்கு பரிமாறப்படும் உணவுகள் குறித்து பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். போபாலில் இருந்து சமீபத்தில் ஆக்ராவிற்கு வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த தம்பதிக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது.
விதித் வர்ஷ்னே என்பவர் தனது குடும்பத்தினருடன் போபாலில் இருந்து ஆக்ராவுக்கு நேற்று முன்தினம் (ஜுன் 18) வந்தே பாரத் ரயிலில் சென்றுள்ளார். அப்போது, ரயிலில் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உணவில் கரப்பான் பூச்சி இருப்பதைக் கண்ட விதித், அதனை புகைப்படம் எடுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டார்.
தொடர்ந்து ரயில் போக்குவரத்துத் துறை அமைச்சரையும், அமைச்சகத்தையும் மேற்கோள் கோட்டி, ரயிலில் உணவு விநியோகிக்கும் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்திருந்தார். இதுகுறித்து ஐஆர்சிடிசி-யின் எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ”உங்கள் பயணத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்திற்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். இந்த சம்பவம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், இதில் சம்பந்தப்பட்ட உணவு சேவை வழங்குபவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.
Read more ; ஆண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? 29 ஆண்டுகளாக பெண்கள் மட்டுமே வாழும் ஒரு கிராமம்!!