Indian Railways| ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி.! பயணிகள் ரயில் கட்டணம் கணிசமாக குறைப்பு.!
பயணிகள் ரயில் கட்டணத்தை (Passenger Train fare) கணிசமாக குறைக்கப் போவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. 40 முதல் 50 சதவீதம் வரை ரயில் கட்டணம் குறைய உள்ளது என்பதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவிட் லாக் டவுனுக்கு பிறகு பயணிகள் மற்றும் மெமு ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்டன. இதனால் ரயில் கட்டணங்கள் அதிகரித்தன. கோவிட் சமயங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கவே இதனை அமல்படுத்தியதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது.
முன்னதாக பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயிலில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30ஐ செலுத்தி வந்தனர். ஆனால் தற்போது டிக்கெட்டுகளின் குறைந்த பட்ச கட்டணம் ரூ.10 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டு அமைப்பில் (UTS) பயன்பாட்டில் கிடைக்கின்றன.
செவ்வாய்கிழமை (பிப்ரவரி 27, 2024) அதிகாலை முதல் அமலுக்கு வரும் வகையில், அனைத்து மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் (MEMU) மற்றும் 'ஜீரோ' என்று தொடங்கும் எண்களைக் கொண்ட ரயில்களில் சாதாரண வகுப்பின் கட்டணத்தை இந்திய ரயில்வே நிர்வாகம் 50 சதவிகிதமாக குறைத்துள்ளது. இந்த மாறுதல் தினசரி பயணிகளால் மிகவும் வரவேற்கப்படுகிறது.